நாடு முழுக்க கேஸ் சிலிண்டர் வாங்குவதற்கான முக்கியமான சில விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, கேஸ் சிலிண்டர் வாங்குவதில் குறிப்பிட்ட கட்டுப்பாடு ஒன்று விதிக்கப்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் வாங்க ஆதார் மூலம் மேற்கொள்ளப்படும் கேஒய்சி கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார் கேஒய்சி இல்லாமல் கேஸ் சிலிண்டர் வாங்க முடியாது என்பதை திட்டவட்டமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மானியத்துடன் கூடிய எல்பிஜியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களால் வழங்கப்பட்ட ஆதாரை அங்கீகரிப்பதற்காக மட்டுமே இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில்தான், ஆதார் சரிபார்ப்பிற்காக கை ரேகை பதியாவிட்டாலும் கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என்று எல்பிஜி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, மானியத்துடன் கூடிய எல்பிஜியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களால் வழங்கப்பட்ட ஆதாரை அங்கீகரிப்பதற்காக மட்டுமே இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், கை ரேகை கொடுக்க இணைப்பு எடுத்த ஆட்கள் எப்போதும் வீட்டில் இருக்க வாய்ப்பு இல்லை. அதனால் அவர்கள் கைரேகை கொடுக்க முடியாமல் போகலாம். இதனால், மானியம் துண்டாகும் வாய்ப்புகள் உள்ளன.
இதனால், ஆதார் சரிபார்ப்பிற்காக கை ரேகை பதியாவிட்டாலும் கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என்று எல்பிஜி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கைரேகை எப்போதும் வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால், அது கட்டாயம் இல்லை. கைரேகை கொடுத்தால் மட்டுமே சிலிண்டர் கிடைக்கும் என்பது தவறானது என்று எல்பிஜி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பொதுவாக சர்வர் செயலிழப்பு போன்ற தொழில்நுட்ப கோளாறுகளால் ஆதார் அங்கீகார செயல்முறை அடிக்கடி சிக்கலுக்கு உள்ளாகும். இந்த அங்கீகார செயல்முறையை அவர்கள் முடிக்கவில்லை என்றால், அது எரிவாயு இணைப்பு துண்டிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்று மக்கள் அடிக்கடி பீதியடைந்துள்ளனர்.
இதனால் கட்டணம் உயராது. அதே சமயம் அபராதம் விதிக்கப்படாது. மேலும் மானியமும் தடைபடாது. எனவே, ஆதார் சரிபார்ப்பிற்காக கை ரேகை பதியாவிட்டாலும் கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என்று எல்பிஜி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Read More : புதிதாக இந்த தொழில் தொடங்கினால் அதிக லாபம் கிடைக்கும்..!! எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க..!!