மாஸ்க், கிருமி நாசினி உள்ளிட்ட பொருட்களை விற்க மருத்துவ உரிமம் பெற்றியிருப்பது கட்டாயம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது..
தமிழக அரசு இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மருத்துவ உபகரணங்களின் தயாரிப்பு இறக்குமதி மற்றும் விற்பனை ஆகியவற்றை கட்டுப்படுத்தவும், வரைமுறைப்படுத்தவும், ஆகஸ்ட் 11 முதல் மருத்துவ உபகரணங்களுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. முகக்கவசம், தெர்மல் ஸ்கேனிங் கருவி, அறுவை சிகிச்சை கையுறைகள், மருத்துவமன படுக்கை, கவச உடைகள், கிருனி நாசினி, காண்டாக் டென்ஸ், அக்குபஞ்சர் கிட், குழந்தை படுக்கைக்கள் உள்ளிட்ட உபகரணங்கள் இந்த விதியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது..
மருத்துவ உபகரணங்களின் முழுமையான பட்டியல் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.. மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியத்தில் இணையதளத்தின் மூலம் உரிமத்தை பெற விண்ணப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது..
எனவே ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் உரிய உரிமம் இல்லாமல் முகக்கவசம், கிருமி நாசினி, கவச உடை, போன்ற மருத்துவ உபகரணங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது…” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..