fbpx

’அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வந்தால் மட்டும் போதாது’..!! ’இதையும் செய்யணும்’..!! பிரதமர் மோடியை விமர்சித்த நடிகை ரோகிணி..!!

தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி அடிக்கடி வந்து சென்றால் மட்டும் பத்தாது என்று நடிகை ரோகிணி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருவது மட்டுமின்றி, மாநிலத்திற்குத் தேவையான திட்டங்களையும் வழங்க வேண்டும் என்றார். லோக்சபா தேர்தல் குறித்துப் பேசிய அவர், “எப்போதும் போல எதிர்வரும் லோக்சபா தேர்தலில் நமது தோழர்கள் எங்கெல்லாம் போட்டியிடுகிறார்களோ. அங்கெல்லாம் நான் பிரச்சாரம் செய்வேன். இது லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரம் மட்டும் இல்லை. நாம் எப்போதும் சொல்லி வரும் விஷயம் தான்.

நாம் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும். சமத்துவமின்மை இல்லாத சமூகத்தை நோக்கி நாம் செல்ல தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதையே தான் வலியுறுத்தப் போகிறோம். அடிக்கடி பிரதமர் தமிழ்நாட்டிற்குத் தான் வருகிறார். தமிழ்நாடு அவருக்குப் பிடித்துப் போய்விட்டது என நினைக்க வேண்டாம். அப்படி வந்தாலாவது தமிழர்கள் தன்னை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறார். பிரதமர் பதவியில் இருக்கும் அவருக்கான அனைத்து மரியாதையையும் நாம் தருகிறோம். அதேநேரம் தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்தையும் மத்திய அரசு செய்தால் நன்றாக இருக்கும். சும்மா வந்து பார்த்துவிட்டுப் போனால் மட்டும் பத்தாது.

திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மகளிருக்குப் பல நலத்திட்டங்கள் கொண்டு வந்துள்ளனர். பல நூலகங்களைத் திறந்துள்ளனர். புத்தகத் திருவிழாக்களை நடத்தியுள்ளனர். படிப்பு எந்தளவுக்கு முக்கியம் என்பதை மாணவர்களிடம் கொண்டு செல்கிறார்கள். இதை வேறு எந்த மாநிலமும் இந்தளவுக்குச் செய்தது இல்லை” என்று அவர் தெரிவித்தார்.

Chella

Next Post

உடல் எடையை வேகமாக குறைக்கணுமா.? ஆரஞ்சு பழத்தை இப்படி சாப்பிடுங்க.!?

Mon Jan 29 , 2024
நவீன காலகட்டத்தில் தவறான உணவு பழக்கவழக்கங்களாலும், அன்றாட வாழ்க்கை முறையினாலும் பலருக்கும் உடல் எடை அதிகரித்து தன்னம்பிக்கை இல்லாமல் இருந்து வருகின்றனர். உடல் எடையை குறைப்பதற்கு பல்வேறு வகையான மருந்துகளையும், டயட் முறைகளையும் பின்பற்றி வந்தாலும் எளிதில் உடல் எடையை குறைக்க முடியவில்லை என்று கவலையில் உள்ளீர்களா? ஆரஞ்சு பழத்தை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை விரைவாக குறைக்கலாம். வைட்டமின் சி ,ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், நார்ச்சத்து […]

You May Like