பல மாநிலங்களில் பின்பற்றப்படுவது போலவே யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்கள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் கட்டாயம் இதை பின்பற்ற வேண்டும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சமீப காலமாக விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் இதைத் தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து ஆணையர் ஏ.எஸ். சிவக்குமார் கூறுகையில் ’’ இனி வாகன ஓட்டிகள் விதிமுறையை மீறி செயல்படக்கூடாது. தலைக்கவசம் அணியாமல் அமர்ந்து சென்றால் முதல்முறை ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். தவறிழைப்பவர்களின் ஓட்டுனர் உரிமமும் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படும். என்றார்.
இது தவிர வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்தினாலும் அபராதம் விதிக்கப்படும். புதுச்சேரியில் முன்னதாக ஹெல்மட்டை கட்டாயமாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கத.
புதுச்சேரியில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் 2019ம் ஆண்டு முதல் 2021ம் ஆணடு வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 3,410 பேர் விபத்துக்கள் நடந்துள்ளன. 445 இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரிழந்துள்ளனர். எனவே இதை தடுக்கும் வகையில் இந்த புதிய விதிமுறை என தெரிவித்துள்ளார்.
இதில் முக்கியமாக தலைக்கவசம் அணியாததால் உயிரிழப்புகள் ஏற்பட்டதும் தெரியவந்தது. இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்ய அரசு தற்போது பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு போக்குவரத்து துறைக்கு செல்பவர்கள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். இருசக்கர வாகனங்களை காட்சிப்படுத்தும் ஷோ ரூம்கள் வாகனம் வாங்குபவர்களுக்கு தரமான ஹெல்மெட் தர வேண்டும் என போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.