fbpx

அதிகாலையிலே பரபரப்பு.. விஜய் அஜித் பட தயாரிப்பாளர்களின் வீட்டில் IT ரெய்டு..!! பின்னணி என்ன..?

டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளரும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான தில் ராஜூவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கேம் சேஞ்சர் திரைப்படத்தையும், சில ஆண்டுகளுக்கு முன் விஜயின் வாரிசு திரைப்படத்தையும் தில் ராஜூ தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் புஷ்பா 2 தயாரிப்பாளர், மைத்ரி மூவிஸ் நவீன் எர்னேனி மற்றும் நிறுவத்தின் தலைமை நிர்வாக அதிகாரி செர்ரி ஆகியோரது வீடுகளிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. சுமார் 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சோதனை முடிந்த பிறகே வருமான வரித்துறை அதிகாரிகள் ஏதேனும் தகவல்களை வெளியிடுவார்களா, திடீர் சோதனைக்கு என்ன காரணம் என்பது தெரியவரும். அஜித் நடித்து வரும் குட் பேக் அட்லீ திரைப்படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more ; துணைத் தலைவர் பதவியை என் பொண்டாட்டிக்கு விட்டுத்தர மாட்டியா..? மதுவில் ஆசிட் கலந்து கொடுத்து கொலை..!! நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு..!!

English Summary

IT raid at filmmakers house..!! What is the background..?

Next Post

ஒரு நாளைக்கு எத்தனை கப் பிளாக் டீ குடிக்கிறீர்கள்?. ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதா?.

Tue Jan 21 , 2025
How many cups of black tea do you drink a day? Is it good for health?

You May Like