fbpx

Lok Sabha தேர்தல் தேதியை எழுதிக் கொடுத்ததே பிரதமர் மோடி தான்..!! சீறிப்பாயும் எதிர்க்கட்சிகள்..!!

தேர்தல் தேதி முன்கூட்டியே தெரிந்ததால்தான் தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி அடிக்கடி பிரசாரத்துக்கு வந்தார் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத்திலேயே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேட்புமனு தாக்கலானது, வரும் 20ஆம் தேதி துவங்கி, 27ஆம் தேதி நிறைவடைகிறது. திமுக கூட்டணி தவிர, அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட மற்ற கட்சிகள் கூட்டணியையே இன்னும் இறுதி செய்யாத நிலை உள்ளது.

இந்நிலையில், வேட்பு மனுதாக்கல் துவங்குவதற்கு இன்னும் 3 நாள்களே உள்ளன. அதற்குள் கூட்டணியை முடிவு செய்து, வேட்பாளர்களை அடையாளம் கண்டு, மனுத்தாக்கல் செய்யும் வகையில் அரசியல் கட்சிகள் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், தேர்தல் தேதியை பிரதமர் மோடி எழுதிக்கொடுத்த படியே தேர்தல் ஆணையம் வாசித்துள்ளது என்றும், இந்த தேதியை முன்கூட்டியே முடிவு செய்ததன் காரணமாக தான் பிரதமர் மோடி தமிழகத்துக்கு 5 முறை வந்து பிரசாரம் மேற்கொண்டுள்ளார் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றம் சாட்டினார்.

தமிழ்நாட்டில் பிரதமர் மோடி என்னதான் பிரசாரம் செய்தாலும் பாஜகவுக்கு தோல்விதான் மிஞ்சும் என்றும் அவர் விமர்சித்துள்ளார். இதற்கிடையே, செல்வப் பெருந்தகையின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பாஜக மூத்த தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன், “பிரதமர் மோடி, தமிழகத்துக்கு வந்ததுபோலவே, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா என பல்வேறு மாநிலங்களுக்கும் சென்றுள்ளார். அவர் தேர்தல் தேதியை தெரிந்து கொண்டு தமிழகத்துக்கு அடிக்கடி வந்து சென்றார் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில் உண்மையில்லை. தமிழகத்தில் தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என சொல்லும் எதிர்க்கட்சியினர், பிரதமர் வருகையை கண்டு ஏன் பயப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : Election Breaking | ‘சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பணம் எடுத்துச் செல்ல தடை’..!! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

Chella

Next Post

Lok Sabha | ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு..!! தமிழகத்தில் பொது விடுமுறை..!!

Sat Mar 16 , 2024
இந்திய மக்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாராளுமன்றத் தேர்தலில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மேலும் பொது தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது. மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கி மார்ச் 27 ஆம் […]

You May Like