fbpx

”அம்பேத்கரை அவமதித்தது காங்கிரஸ் கட்சி தான்”..!! ”நாங்கள் கிடையாது”..!! பிரதமர் மோடி பரபரப்பு பதிவு..!!

அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியது நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு எழுந்த நிலையில், அம்பேத்கரை மத்திய அரசு முழுமையாக மதிப்பதாக பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயர் இப்போது ஒரு பேஷன் ஆகிவிட்டது. அவர் பெயருக்கு பதில் கடவுளின் பெயரை சொல்லியிருந்தால், 7 ஜென்மம் சொர்க்கம் கிடைத்திருக்கும் என்று பேசினார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில், ”காங்கிரஸ் கட்சி தான் அம்பேத்கரை அவமதித்ததாக” பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக, அமித் ஷா அளித்த பேச்சால் சர்ச்சை எழுந்ததை அடுத்து, மோடி இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “அம்பேத்கரால் தான் நாம் இன்று நல்ல நிலைமையில் இருக்கிறோம். டாக்டர் அம்பேத்கரை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம். அவரது கனவுகளை நிறைவேற்ற கடந்த 10 வருடங்களாக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. அம்பேத்கருக்கு எதிராக செய்த செயலை காங்கிரஸ் கட்சி மறைக்க பார்க்கிறது. அம்பேத்கரை இரண்டு முறை தேர்தலில் தோற்கடித்தது, அவருக்கான பாரத் ரத்னா விருதை நிராகரித்தது காங்கிரஸ் கட்சிதான்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு..!! EPFO வெளியிட்ட இந்த அறிவிப்பை கவனிச்சீங்களா..? மறந்துறாதீங்க..!!

English Summary

Prime Minister Modi has clarified that the central government fully respects Ambedkar.

Chella

Next Post

சினிமாவுக்கு முழுக்கு..!! பிரபல அரசியல் கட்சியில் இணையும் கீர்த்தி சுரேஷ்..!! வெளியான பரபரப்பு தகவல்..!!

Wed Dec 18 , 2024
Actress Keerthy Suresh's wedding has ended in a grand manner. In this situation, a piece of information about Keerthy Suresh is being talked about a lot in the cinema circle.

You May Like