அடுத்த மூன்று மாதங்கள் இயல்பை விட வெப்பமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் வழக்கத்தை விட அதிக வெப்பநிலை இருக்கும். குறிப்பாக, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத், பீகார், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை ஏற்படலாம்.
நாட்டின் மேற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வெப்பநிலை இயல்பாக இருக்கும் என்றும் குறைந்தபட்ச தட்பவெப்ப நிலை, பெரும்பாலான மண்டலங்களில் இயல்பைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, ஏப்ரல் முதல் ஜூ்ன் வரை 4 முதல் 7 வெப்ப அலை நாட்கள் தான் இருக்கும்.
தற்போது, வட மற்றும் கிழக்கு, மத்திய மற்றும் வடமேற்கு இந்தியாவில், வழக்கத்தை காட்டிலும் இரண்டு முதல் நான்கு வெப்ப அலை நாட்கள் கூடுதலாக ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பகல் 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை வெளியே செல்வதை குறைக்க வேண்டும். அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
மின்சார தேவை அதிகரிக்கும்: இந்த கோடை காலத்தில் வெப்ப அலை நாட்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மின்சார தேவை 9-10% அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த ஆண்டு, மே 30 அன்று இந்தியாவின் அகில இந்திய உச்ச மின்சார தேவை 250 ஜிகாவாட்களுக்கு மேல் இருந்தது, இது கணிப்புகளை விட 6.3% அதிகமாகும். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்ப அழுத்தமே மின்சாரத் தேவை அதிகரிப்பதற்கு ஒரு முக்கியக் காரணியாகும்
Read more: 27 மாதங்களில் ரயில் மோதி யானைகள் இறப்பு நிகழவில்லை..!! – தெற்கு ரயில்வே