fbpx

இளைஞர்களே இது தான் சான்ஸ்…! தொழில் முனைவோருக்கு 50% மானியம்…! ஆட்சியர் அறிவிப்பு

மத்திய அரசு மீன்வளம்‌ கால்நடை பராமரிப்பு மற்றும்‌ பால்‌ வள அமைச்சகத்தின்‌ கீழ்‌ இயங்கும்‌ கால்நடை பராமரிப்பு மற்றும்‌ பால்‌ வளத்துறையின்‌ மூலமாக செயல்படுத்தப்படும்‌ தேசிய கால்நடை இயக்கத்தின்‌ கீழ்‌ 2021-22ம்‌ ஆண்டு முதல்‌ புதிய திட்டம்‌ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு; தேசிய கால்நடை இயக்கத்தின்‌ வேலைவாய்ப்பு உருவாக்கம்‌, தொழில்‌ முனைவோர்‌ மேம்பாடு, கால்நடை உற்பத்தி திறன்‌ அதிகரிப்பு மற்றும்‌ இறைச்சி, பால்‌, முட்டை மற்றும்‌ கம்பளி உற்பத்தியை அதிகரிப்பதை இலக்காககொண்டு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்‌ நோக்கமானது, புறக்கடை கோழி வளர்ப்பு, செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, தீவனம்‌ மற்றும்‌ தீவனபயிர்‌ சேமிப்பு மற்றும்‌ மேம்படுத்துதல்‌, செம்மறியாடு மற்றும்‌ வெள்ளாட்டினத்தை மேம்படுத்துதல்‌‌ மற்றும்‌ தீவன உற்பத்தி ஆகிய பணிகளை மேற்கொள்ள தொழில்‌ முனைவோரை உருவாக்குதலாகும்‌.

தொழில்முனைவோர்‌ செயல்பாடுகளும்‌ மானிய தொகையும்‌

இத்திட்டத்தின்‌ கீழ்‌ கோழி வளர்க்க முனைவோர்‌ 1000 நாட்டு கோழிகள்‌ கொண்ட பண்ணை அமைத்து, முட்டை உற்பத்தி செய்து, கோழி குஞ்சு பொரிப்பகம்‌ வழி கோழிக்குஞ்சுகள்‌ உற்பத்தி செய்து நான்கு வார வயது வரை வளர்த்து விற்க மொத்த‌ திட்ட செலவில்‌, மூலதனத்தில்‌ 50% மானியம்‌ அதிகபட்சமாக ரூ. 25 லட்சம்‌ வரை மானியம்‌ வழங்கப்படும்‌.

ஆடுகள்‌ அல்லது செம்மறி ஆடுகள்‌ வளர்க்க முனைவோருக்கு 500 பெண்‌ஆடுகள்‌ 25 கிடா கொண்ட அலகுகள்‌ அமைக்க மொத்த திட்ட செலவில்‌ மூலதனத்தில்‌ 50% மானியம்‌ அதிகபட்சமாக ரூ. 50 லட்சம்‌ வரை மானியம்‌ இரண்டு தவணைகளில்‌ வழங்கப்படும்‌..

பன்றி பண்ணை அமைக்க முனைவோருக்கு 100 பெண்‌ பன்றிகள்‌ 25 ஆண்‌ பன்றிகள்‌ கொண்ட அலகுகள்‌ அமைக்க மொத்த திட்ட செலவில்‌, மூலதனத்தில்‌ 50% மானியம்‌ அதிகபட்சமாக ரூ. 30 லட்சம்‌ வரை மானியம்‌ வழங்கப்படும்‌..தீவனம்‌ மற்றும்‌ தீவனபயிர்‌ சேமிப்பு மற்றும்‌ பாதுகப்பிற்காக ஓராண்டில்‌ 2000 -2400 மெட்ரிக்‌ டன்‌ வைக்கோல்‌ / ஊறுகாய்‌ புல்‌ /ஒரு நாளில்‌ 30 மெட்ரிக்‌ டன்‌ மொத்தகலப்பு தீவனம்‌ / தீவன கட்டி தயாரித்தல்‌ மற்றும்‌ சேமித்தல்‌ பணிகளை மேற்கொள்ள முனைவோர்க்கு தளவாடங்கள்‌ வாங்க மொத்த திட்ட செலவில்‌, மூலதனத்தில்‌ 50% மானியம்‌ – அதிகபட்சமாக ரூ. 50 லட்சம்‌ வரை மானியம்‌ வழங்கப்படும்‌.

யார்‌ பயன்பெறலாம்‌

இத்திட்டத்தின்‌ கீழ்‌ தனி நபர்‌, சுய உதவி குழுக்கள்‌ , விவசாய உற்பத்தியாளர்கள்‌ அமைப்பு , விவசாய கூட்டுறவுகள்‌, கூட்டு பொறுப்பு சங்கங்கள்‌, பிரிவு 8 நிறுவனங்கள்‌ ஆகியவை தகுதியானவர்கள்‌ ஆவர்‌. முனைவோர்‌ சொந்தமாக அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலம்‌ வைத்திருக்க வேண்டும்‌. தொழில்முனைவோர்‌/தகுதியுள்ள நிறுவனங்கள்‌ திட்டத்திற்கான வங்கி கடன்‌ அனுமதி அல்லது வங்கி உத்தரவாதத்தை பெற வேண்டும்‌, திட்ட மதிப்பீட்டிற்கான அங்கிகாரத்தினையும்‌ பெற வேண்டும்‌.பயன்‌ டஇபெற விரும்புவோர்‌ https://nlm.udyamitra.in/ என்கிற இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்‌.

Vignesh

Next Post

’ரஜினி போன்றவர்கள் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும்’..!! அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை

Wed Oct 19 , 2022
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அப்போதைய ஆட்சியர் உட்பட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க அருணா ஜெகதீசன் ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம், விசாரணையை முடித்து அது தொடர்பான […]
’ரஜினி போன்றவர்கள் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும்’..!! அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை

You May Like