தமிழகத்தில் இருக்கின்ற பள்ளிகளில் தமிழகத்தின் தாய் மொழியாம் தமிழ் கற்பிக்கப்படுவதில்லை என்று புகார்கள் அடிக்கடி எழுந்த நிலையில், தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து பள்ளிகளிலும் 10ம் வகுப்பு வரையில் தமிழை கட்டாயமாக்கும் சட்டம் கடந்த 2015 ஆம் வருடம் அமலுக்கு வந்த நிலையிலும், 8ம் வகுப்பு வரை மட்டுமே தமிழ் மொழி கற்பிக்கப்படும் என்றும், நடப்பு கல்வி ஆண்டில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இத்தகைய நிலையில்தான் மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தின் செயல்பட்டு வரும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான கேந்திர வித்யாலயா பள்ளிகள் மற்றும் ராணுவ துறையின் சைனிக் பள்ளிகளிலும் 10ம் வகுப்பு வரையில் தமிழ் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவை அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.