fbpx

“ நானும் டெல்டாகாரன் தான்.. தமிழ்நாட்டில் நிச்சயம் அது நடக்காது..” முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டம்..

காவிரி டெல்டா மாவட்டங்களில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் டெல்டா பகுதி விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. மேலும் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.. நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு வெளியிட்ட ஏல அறிவிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சி உறுப்பினர்கள் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.. அப்போது “ தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகளில் பழுப்பு நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பை ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இந்த நிலக்கரி சுரங்க அறிவிப்பு வந்த உடன் முதலமைச்சர் விரைவாக செயல்பட்டு பிரதமருக்கு கடிதம் எழுதினார். பாதுகாக்கப்பட்ட வேளாண் நிலங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்பதை அந்த கடிதத்தில் கூறியிருந்தார்..

தமிழக அதிகாரிகளும், மத்திய நிலக்கரி அமைச்சக அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.. எனவே எந்த காலத்திலும் டெல்டா மாவட்டங்கள் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஒருபோதும் இத்தகைய திட்டங்களை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது..” என்று தெரிவித்தார்..

இதை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் இதுகுறித்து பேசினார்.. “இந்த செய்தி வந்தபோது உங்களைப் போன்று தான் நானும் அதிர்ச்சி அடைந்தேன். செய்தியைப் பார்த்த உடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி, உடனடியாக பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தின் நகலை அமைச்சரிடம் அளிக்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரிடம் கூறி இருக்கிறேன். முதலமைச்சராக மட்டுமல்ல.. நானும் டெல்டாகாரன் தான். உங்களைப் போன்று நானும் உறுதியாக இருப்பேன். எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழக அரசு இது போன்ற திட்டத்திற்கு அனுமதி அளிக்காது.” என்று தெரிவித்தார்…

Maha

Next Post

லாட்டரியில் அடித்தது ரூ.80 லட்சம்..!! நண்பர்களுக்கு மது விருந்து..!! கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

Wed Apr 5 , 2023
கேரள மாநிலம் திருமண கோபுரம் பாங்கோடு சேர்ந்தவர் சஜீவ். இவர் வீட்டில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படும் நிலையில், தலையில் பலத்த காயங்களுடன் கடந்த 2ஆம் தேதி திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், மறுநாளே சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. 35 வயதான சஜீவுக்கு சமீபத்தில் லாட்டரி சீட்டில் ரூ.80 லட்சம் […]

You May Like