எதிர்க்கட்சித் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, ஆந்திராவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் இன்று மாலை அல்லது இரவு ரயில் மூலம் சென்னை வருவதாக கூறப்பட்டது. மேலும், ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்று, சென்னை நகருக்கு அழைத்துச் சென்று, இரவு ஒரு நட்சத்திர விடுதியில் தங்க வைக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.
பின்பு, நாளை காலை 8 மணிக்கு, சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தான், ராகுல் காந்தியின் சென்னை வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயிலில் இரவு முழுவதும் பயணித்து சென்னை செல்வது பாதுகாப்பற்றதாக அறிவுறுத்தப்பட்டதால், சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.