fbpx

வாழ்நாள் முழுவதும் விடாது!… புதிய கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிக்கும்!… பிரித்தானிய மருந்துவ நிபுணர் எச்சரிக்கை!

கொரோனாவை பொருத்தவரை, அது நம் வாழ்நாள் முழுவதும் நம்முடனேயே இருக்கும் என்றும் அதை சமாளித்து வாழ நாம் பழகிக்கொள்ளப்போகிறோம் என்றும் பிரித்தானிய மருத்துவ நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானியாவைப் பொருத்தவரை, தற்போது அதிக அளவில் காணப்படும் JN.1 Omicron மாறுபாடு புதிய தொற்றாகும். எளிதில் தொற்றக்கூடிய தன்மை கொண்டதால் வேகமாகப் பரவும் இந்த கொரோனா வைரஸ், தற்போது பிரித்தானியாவில் காணப்படும் கொரோனா தொற்றுக்களில் 51.4 சதவிகித இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளது. இது முந்தைய தொற்றுக்களை ஏற்படுத்திய கொரோனா வைரஸ்களைவிட மூன்று மடங்கு அதிகம் பரவியுள்ள வைரஸ் ஆகும்.

இந்நிலையில், விடுமுறை நாட்களுக்குப் பிறகு, பிரித்தானியாவில் பள்ளிகள் மீண்டும் நேற்று திறக்கப்பட்டது. இந்தநிலையில், பிள்ளைகள் பள்ளிக்குத் திரும்பியதாலும், விடுமுறை நாட்களுக்குப் பின் மக்கள் அலுவலகங்களுக்கு செல்லத் துவங்கி உள்ளதாலும், JN.1 கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்கலாம் என, ஆக்ஸ்போர்டு பல்கலையின், குழந்தைகளுக்கான தொற்றுநோய் மற்றும் நோயெதிர்ப்பு சக்தித்துறை நிபுணரான பேராசிரியர் Sir Andrew Pollard எச்சரித்துள்ளார். அத்துடன், கொரோனாவை பொருத்தவரை, அது நம் வாழ்நாள் முழுவதும் நம்முடனேயே இருக்கப்போகிறது என்று கூறும் Sir Andrew Pollard, அதை சமாளித்து வாழ நாம் பழகிக்கொள்ளப்போகிறோம் என்கிறார்.

Kokila

Next Post

பொதுச் சட்ட நுழைவு தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு...! ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு...!

Tue Jan 9 , 2024
அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொதுச் சட்ட நுழைவு தேர்விற்கான பயிற்சி (Common law admission test) இலவசமாக வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனைத்தைச் சார்ந்த மாணாக்கர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த […]

You May Like