fbpx

உலகின் முதல் நாடாக ChatGPTக்கு தடை விதித்த இத்தாலி.. என்ன காரணம் தெரியுமா..?

தனியுரிமைக் காரணங்களுக்காக ChatGPTஐ தடை செய்த உலகின் முதல் நாடாக இத்தாலி மாறியுள்ளது.

ChatGPT என்பது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மென்பொருளாகும்.. சமீப காலமாக இந்த ChatGPT உலகளவில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.. நாம் கூகுளில் ஒரு விஷயத்தை பற்றி தேடினால், அதை பற்றி பல்வேறு ஆப்ஷன்கள் நமக்கு கிடைக்கும்.. ஆனால் இந்த ChatGPT மூலம் தேடினால், நாம் என்ன தேடுகிறோமோ அதை பற்றிய விவரங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் ஆராய்ந்து, நமக்கு தேவையான சரியான விவரத்தை மட்டுமே வழங்கும்.. மேலும் ChatGPT-யின் சுவாரஸ்யமான பதில்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது..

கவிதை, கட்டுரை தொடங்கி ChatGPT செயலி, MBA தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது. இதனால் குறுகிய காலத்திலேயே அதிகமானோர் இந்த ChatGPT செயலியை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.. சிலர் இந்த சாட்போட்டின் திறன்களை பாராட்டி வந்தாலும், சிலர் அதன் எதிர்மறையான தாக்கங்களை பற்றி கவலைப்படுகிறார்கள்.

இந்நிலையில், தனியுரிமைக் காரணங்களுக்காக ChatGPTஐ தடை செய்த உலகின் முதல் நாடாக இத்தாலி மாறியுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக ChatGPTக்கு இத்தாலி தற்காலிகத் தடை விதித்துள்ளது. ChatGPT தாய் நிறுவனமான OpenAI ‘பயனர்களிடமிருந்து தனிப்பட்ட தரவை சட்டவிரோதமாக சேகரிப்பதாக’ இத்தாலியின் தரவு பாதுகாப்பு ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. இத்தாலிய அரசாங்கத்தின் கண்காணிப்புக் குழுவும் ChatGPT-ன் தரவு மீறலை மேற்கோளிட்டுள்ளது.. இந்த மீறலை OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேனும் ஒப்புக்கொண்டார்.

மேலும், இத்தாலியின் தரவுப் பாதுகாப்பு ஆணையம், ChatGPTக்கு முறையான வயது சரிபார்ப்பு அமைப்பு இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளது, இது சிறுவர்களை ‘சட்டவிரோதமான விஷயங்களை’ செய்ய தூண்டக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது…

OpenAI நிறுவனம் கூடுதல் தகவல்களை’ அளிக்கும் வரை இத்தாலியில் ChatGPT ஐத் தடை செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. ChatGPTக்கு தடை விதிப்பது குறித்து இத்தாலிய அரசாங்கம் இறுதி முடிவை எடுப்பதற்கு முன், சாத்தியமான தீர்வுகளை காட்ட அந்நிறுவனத்திற்கு 20 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே OpenAI நிறுவனம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ ChatGPT போன்ற AI அமைப்புகளைப் பயிற்றுவிப்பதில் தனிப்பட்ட தரவைக் குறைக்க தீவிரமாக வேலை செய்து வருகிறோம்.. A.I. ஒழுங்குமுறை அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று தெரிவித்துள்ளது

இதே போல் OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ இத்தாலி உலகில் எனக்கு பிடித்த நாடுகளில் ஒன்று.. இத்தாலியில் ChatGPT வழங்குவதை நிறுத்திவிட்டோம்.. எல்லா தனியுரிமைச் சட்டங்களையும் பின்பற்றுகிறோம் என்று நாங்கள் நினைக்கிறோம். இத்தாலி எனக்கு மிகவும் பிடித்த நாடுகளில் ஒன்றாகும், விரைவில் மீண்டும் அங்கு ChatGPTக்கு நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறேன்..” என்று குறிப்பிட்டுள்ளார்..

Maha

Next Post

5 லட்சம் சம்பளத்தில் கனடாவில் வேலை…..! இளைஞர்களிடம் ஏமாற்றி 23 லட்சம் அபேஸ் செய்த நபரை சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறை…..!

Sun Apr 2 , 2023
கோயமுத்தூர் மாவட்டம் சிறுமுகை பகுதியைச் சேர்ந்த வைத்தீஸ்வரன் இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்திருக்கிறார் அதோடு வெளிநாட்டில் வேலைக்கு முயற்சித்து வருகிறார். இந்த நிலையில் தான் facebook போன்ற சமூக வலைதள பாக்குகளில் கனடாவில் வேலை வாய்ப்பு என்று விளம்பரத்தை பார்த்து இருக்கிறார். அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு தான் கனடாவிற்கு செல்ல வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தை கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, பிரகாஷ் என்பவர் வைத்தீஸ்வரனை நேரடியாக சந்தித்திருக்கிறார் அப்போது […]

You May Like