பிரேசிலில், உலகிலேயே மிகக் கொடிய விஷ பாம்புகள் மட்டுமே வாழும் தீவு ஒன்று உள்ளது. இந்த அபாயகரமான பகுதிக்கு செல்ல மனிதர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டின் இல்காடா குயீமடா கிராண்டு என்ற தீவு ஒன்று அமைந்துள்ளது. இது, பாம்புகளின் தீவு என்றே அழைக்கப்படுகிறது. பிரேசிலின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள இந்த தீவு காடுகளும், பாறைகளும் நிறைந்தது. சாவோபவுலோ மாகாண கடற்பரப்பில் இருந்து 31 கி.மீ தொலைவில் உள்ள இந்த தீவின் பரப்பளவு சுமார் 43 ஆயிரம் சதுர கி.மீ ஆகும். இந்த தீவில், ஒரு சதுர மீட்டருக்கு ஒன்று முதல் 3 பாம்புகள் வரை வசிப்பதாக கூறப்படுகிறது. தன்னை வேட்டையாடவோ கொல்லவோ எந்த உயிரினமும் இல்லாத காரணத்தால் பாம்புகள் தங்கள் இனத்தை அந்த தீவில் பெருக்கி அதை தனக்கான தீவாக மாற்றியுள்ளதாகவும் அந்த தீவுக்கு ஓய்வெடுக்க வரும் இடம்பெயரும் பறவைகளை அந்த பாம்புகளே உணவாக கொள்கின்றன என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த தீவில் பூமியிலுள்ள முக்கியமான விஷ ஜந்துக்களில் ஒரு வகையை சேர்ந்த கோல்டன் லான்ஸ்ஹெட்ஸ் இனப் பாம்புகள் உள்ளன. இந்த வகை பாம்பு இனம் இல்ஹா தீவை தவிர உலகில் வேறு எங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜரராகா என்னும் இனத்தை விட கோல்டன் லான்ஸ்ஹெட் ஐந்து மடங்கு சக்தி வாய்ந்த விஷத்தை கொண்டது இந்த பாம்பு, அதிக விஷத்தன்மை வாய்ந்த பாம்பு என அழைக்கப்பட்டாலும், அந்த பாம்பால் தாக்கப்பட்டு எந்த இதுவரை எவ்வித இறப்பும் பதிவாகவில்லை என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மனித வாடையை உடனே உணர்ந்து கொள்ளக் கூடிய சக்தி கொண்ட இந்த பாம்புகளால், இத்தீவுக்குள் மனிதர்கள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.