fbpx

’இது மிகவும் மோசமான செயல்’ ஹோடெல் அறை வீடியோ விவகாரத்தில் கடுப்பான அனுஷ்கா…

விராட் கோலியின் ஹோடெல் அறையை வீடியோ எடுத்து வைரலாக்கிய சம்பவத்தை அடுத்து இது மிகவும் மோசமான செயல் என்று குறிப்பிட்டு அனுஷ்கா கமென்ட் செய்துள்ளார்.

டி20 போட்டிகளில் விளையாடி வரும் விராட்கோலி நட்சத்திர ஹோடெல் ஒன்றில் தங்கியிருந்தபோது அவரது அறையில் ரசிகர் அல்லது ஹோடெல் பணியாளர் ஒருவர் வீடியோ எடுத்து அதை வெளியிட்டுள்ளார். இது இன்ஸ்டாகிராமில் வைரலாகியது. இதைப் பார்த்த அவர்மனைவியும் நடிகையுமான அனுஷ்கா கடும் கோபமடைந்தார்.

இதையடுத்து அந்த வீடியோவுக்கு பதில் அளித்துள்ளார். ’ கடந்த காலத்தில் எல்லாம் ரசிகர்கள் இரக்கமே இன்றி நடந்து கொண்ட சம்பவத்தை அனுபவித்தேன். அதெல்லாம் மிகவும் மோசமான செயல். கருணையே இல்லாமல் நடந்து கொண்டிருக்கின்றார்கள். ஒரு மனிதனின் அத்துமீறிய செயல். நீ ஒரு பிரபலமானவரா இருந்தால் நீங்கள் இதை சமாளிக்க வேண்டி இருக்கும். இதுவும் ஒரு பிரச்சனை என்பதை நீங்கள் உணர வேண்டும். சுய கட்டுப்பாட்டை பயிற்சி செய்ய வேண்டும். அது அனைவருக்கும் உதவியாக இருக்கும். இதே விஷயம் உங்கள் படுக்கை அறையில் நடந்திருந்தால் அங்கே எல்லைக் கோடு எங்கே? என கேட்டுள்ளார்.

https://www.instagram.com/reel/CkXVWI6g7Ff/?utm_source=ig_web_copy_link

மேலும் அவர், ’’ ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த வீரர்களைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருப்பார்கள் என்பதை நான் அதை புரிந்து கொள்கின்றேன். அதை நான் பாராட்டுகின்றேன். ஆனால் , இந்த வீடியோ திகைக்க வைக்கின்றது. எனது தனியுரிமையை பற்றிய கவலை என்னை வந்தடைகின்றது. எனக்கு சுதந்திரம் இல்லை என்றால் அதெப்படி? சொந்த ஓட்டல் அறையில் தனியுரிமை இல்லாதபோது நான் அதை எங்கே எதிர்பார்க்க முடியும்? இந்த வகையான வெறித்தனம் மற்றும் தனியுரிமை அத்துமீறல் சரியில்லை. பிறரின் தனிப்பட்ட விஷயத்தில் தயவு செய்து மதியுங்கள். அவர்களை பொழுதுபோக்காக கருத வேண்டாம்.. என்று விராட் கோலியும் பதிவிட்டுள்ளார்.

Next Post

நியூசி. வங்கதேசம் சுற்றுப்பயணம் : டி20 இந்திய அணி அறிவிப்பு…

Mon Oct 31 , 2022
டி20 உலககோப்பை தொடர் ஆஸ்திரேலியவில் நடைபெற்று வருகின்றது. இதில் 12 சுற்றில் இந்தியா விளையாடி வருகின்றது. இதன் இறுதிப்போட்டி வரும் 13ம் தேதி நடைபெறுகின்றது. இதையடுத்து இந்திய அணி நியூசிலாந்திற்கும் அதை தொடர்ந்து வங்கதேசத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 ஒரு நாள் டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடுகின்றது. நியூசிலாந்து மற்றும் வங்கதேச சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அந்த அணியில் ரோகித், கோலி, ராகுல் ஆகிய 3 […]

You May Like