fbpx

’மொத்தமும் போச்சு’..!! ’கையில இருந்த பணத்தையும் செலவு பண்ணிட்டோம்’..!! நடிகை மைனா நந்தினிக்கு இப்படி ஒரு நிலைமையா..?

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் மைனா நந்தினி. அந்த தொடரில் மைனா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானதால் அந்த பெயரே அவரது பெயருக்கு முன்னாள் வந்தது. விஜய் டிவி சீரியலை தொடர்ந்து வம்சம் என்ற படத்தில் காமெடி வேடத்தில் நடித்தார்.

பின்னர், கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட போன்ற படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து, பிக்பாஸ் 6-வது சீசனில் கலந்து கொண்டார். அதன் பின்னர், சின்னத்திரை பக்கம் வரவில்லை. மைனா விங்ஸ் என்கிற யூடியூப் சேனலை தற்போது நடத்தி வருகிறார். இதில், இவருக்கு 16 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.

லவ் ஆக்ஷ்ன் டிராமா என்ற மற்றொரு சேனலை தொடங்கி அதில் குறும்படங்களை வெளியிட்டு வந்தார். புள்ளத்தாச்சி என்ற வெப் தொடரில் நடித்து தனது யூடியூபில் வெளியிட்டு சம்பாதித்து வந்தார் மைனா நந்தினி. இந்நிலையில், அந்த வெப் தொடரை பாதியில் நிறுத்துவதாக தற்போது அறிவித்திருக்கிறார்.

அதாவது, அண்மையில் இலங்கை சென்று படப்பிடிப்பு நடத்தி ஒரு ஹார்டு டிஸ்கில் போட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளனர். மொத்தமாக 800 ஜிபி அளவு புட்டேஜை இலங்கையில் படமாக்கியுள்ளனர். அதை இந்தியா கொண்டுவந்தபோது அந்த ஹார்டு டிஸ்க் தவறுதலாக கீழே விழுந்துள்ளது. பின்னர் அதை சிஸ்டத்தில் போட்டு பார்த்தபோது வேலை செய்யவில்லை. இதனால் தங்களின் உழைப்பு மற்றும் பணம் வீணாகிவிட்டதாக மைனா நந்தினி மற்றும் அவரது கணவர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளனர்.

Read More : ராட்சத ராட்டினம்..!! நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சி..!! 60 அடி உயரத்தில் தொங்கிய 13 வயது சிறுமி..!!

English Summary

Maina Nandini and her husband Yogeswaran have said that their hard work and money have been wasted.

Chella

Next Post

குழந்தைகளிடம் எப்படி தன்னம்பிக்கையை வளர்ப்பது? பெற்றோர்களே இதை நோட் பண்ணுங்க..

Fri Dec 6 , 2024
In this post, we will look at some tips that will help improve children's confidence.

You May Like