fbpx

ட்விட்டரிலும் வந்துவிட்டது!… பணம் சம்பாதிக்க புதிய வழிகள்!… எப்படி தெரியுமா?… எலான் மஸ்க் ட்வீட்!

ட்விட்டரில் பதிவிடும் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் மூலம் பயனர்கள் பணம் சம்பாதிக்க முடியும் என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் வீடியோ உள்ளிட்டவைகளை பதிவேற்றி அதன்மூலம் புகழையும் பணத்தையும் சாமானியர்களும் சம்பாதித்து வருகின்றனர். தங்களுக்கு உள்ள பல்வேறு திறமைகளை வீடியோ உள்ளிட்டவைகள் மூலம் வெளிப்படுத்தி சமூக வலைதளங்களில் வெளியிடுவதால் குறுகிய காலத்திலேயே சிலர் மிகப்பெரிய அளவில் பிரபலமாகிவிடுகின்றனர். அதாவது எந்த விஷயத்தை வேண்டுமானாலும் எழுதலாம் அல்லது வீடியோவை உருவாக்கலாம்.

இதன் காரணமாக பலர் ஒவ்வொரு மாதமும் லட்சங்களில் சம்பாதிக்கிறார்கள். பதிவில் அதிகப்படியான லைக்குகள் மற்றும் பகிர்வுகள் மற்றும் கருத்துகள் இருக்க வேண்டும். இதைச் செய்வதில் நீங்கள் வெற்றி பெற்றால், நிறுவனங்கள் உங்களுக்கு நல்ல ஊதியம் வழங்குகின்றன, மேலும் ஒவ்வொரு பதிவுக்கும் ₹ 10000 முதல் ₹ 50000 வரை சம்பாதிக்கலாம், பிரபலங்கள் மற்றும் செல்வாக்கு செலுத்துபவர்கள் இந்த முறையைப் பின்பற்றுகிறார்கள்.

அந்தவகையில் தற்போது, ட்விட்டரிலும் பதிவிடப்படும் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் மூலம் பயனர்கள் பணம் சம்பாதிக்க முடியும் என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், அதிக உரையுடன் நீண்ட வீடியோக்கள், போஸ்டுகளை பதிவிடலாம் மற்றும் அவற்றை உங்களை பின்தொடருபவர்கள் பார்ப்பதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் எனவும் இதனை பெறுவதற்கு செட்டிங்ஸில் உள்ள மானிடைஸ் (monetize) என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த 12 மாதங்களுக்கு, ட்விட்டர் பணம் எதையும் வைத்திருக்காது. உங்கள் பதிவுகள் மூலம் நாங்கள் பெறும் பணத்தை இனிமேல் நீங்கள் பெறுவீர்கள். இதன் மூலம் iOS மற்றும் Android இல் 70 சதவீதமும் இணையத்தில் 92 சதவீதமும் பணம் பெறுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் உங்கள் வேலையை மேம்படுத்தவும் நாங்கள் உதவுவோம், படைப்பாளர்களின் பண வாய்ப்பை அதிகரிப்பதே எங்கள் குறிக்கோள் என்றும் பதிவிட்டுள்ளார்.

Kokila

Next Post

வயதானாலும் இளமை தோற்றம் வேண்டுமா?... தூதுவளைப் பூக்களின் மருத்துவ குணங்கள் இதோ!

Sat Apr 15 , 2023
தூதுவளை செடியைப் போல தூதுவளை பூக்களும் உடலுக்கு நன்மை தரும் மருத்துவ குணம் கொண்டதாகும். இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தூதுவளைப் பூக்கள் வரப்பிரசாதமாகும். தினம் இரண்டு பூக்களை எடுத்து மென்று தின்று வர உடல் பளபளப்பாக மாறும். என்றும் இளமை நீடிக்கும். தூதுவளைப் பூக்களை 15 எடுத்து 200 மில்லி லிட்டர் நீரில் போட்டு பாதியாகச் சுண்டக்காய்ச்சி பாலும் சர்க்கரையும் கலக்கிப் பருகினால் முக அழகு கிடைக்கும்.உடல் […]

You May Like