fbpx

பிறந்து 7 நாட்கள் தான் ஆகுது..!! கிணற்றில் மிதந்த குழந்தையின் சடலம்..!! தாய் சொன்ன அந்த வார்த்தை..!!

பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தையை பெற்ற தாயே கொலை செய்தாரா என்ற சந்தேகத்தின் பேரில் களக்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கட்டார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி இசக்கியம்மாள் (வயது 28). இவர் மனநலம் சரியில்லாதவர் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், இசக்கியம்மாளுக்கு கடந்த 13ஆம் தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதற்கிடையே, ஆட்டோ ஒட்டுநராக உள்ள ரமேஷ், இன்று அதிகாலையிலேயே தனது பணிக்கு புறப்பட்டுவிட்டார். சவாரி சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனதைக் கண்டு திகைத்துள்ளார்.

பிறந்து 7 நாட்கள் தான் ஆகுது..!! கிணற்றில் மிதந்த குழந்தையின் சடலம்..!! தாய் சொன்ன அந்த வார்த்தை..!!

இதுகுறித்து, மனைவி இசக்கியம்மாளிடம் கேட்டபோது அவர் சரிவர பதில் சொல்லாமல் அருகில் இருந்த கிணற்றை காண்பித்துள்ளார். இதையடுத்து, கிணற்றை பார்த்தபோது குழந்தை ஒன்று மிதப்பது தெரியவந்தது. இதுகுறித்து களக்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டனர். விசாரணையில், மனநிலை பாதிக்கப்பட்ட இசக்கியம்மாள் குழந்தையை கிணற்றில் போட்டு கொன்றிருக்கலாமோ என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

’புற்றுநோய் சுனாமியை இந்தியா எதிர்கொள்ளும்’..!! எச்சரிக்கும் அமெரிக்கா புற்றுநோயியல் நிபுணர்..!!

Thu Jan 19 , 2023
புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் ‘சுனாமியை’ இந்தியா எதிர்கொள்ளும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த புற்றுநோயியல் நிபுணர் ஜேம் ஆபிரகாம் எச்சரித்துள்ளார். உலகமயமாக்கல், வளர்ந்து வரும் பொருளாதாரம், மக்கள் தொகை மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் சுனாமியை இந்தியா எதிர்கொள்ளும் என்று முன்னணி புற்றுநோயியல் நிபுணர் ஜேம் ஆபிரகாம் எச்சரித்துள்ளார். புற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான தடுப்பூசிகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு டிஜிட்டல் […]

You May Like