fbpx

தந்தை இறந்து ஒரு வாரம் ஆச்சு..!! ஆனா இப்போ தான் தகவல் வந்துச்சு..!! மனமுடைந்துபோன பிக்பாஸ் ஷெரின்..!!

பிக்பாஸ் புகழ் நடிகை ஷெரின் தனது தந்தை வளர்ப்பு இல்லாமல் வாழ்ந்து வந்துள்ளார். தாய் மட்டுமே தன்னை வளர்த்து இருப்பதாக ஒரு முறை கூறி இருந்தார். இந்நிலையில், நடிகை ஷெரினின் தந்தை கடந்த ஒரு வாரம் முன்பாக உயிர் இழந்து உள்ளார். ஆனால், அந்த செய்தி அவருக்கு தாமதமாகவே தெரிய வந்துள்ளது. இதற்கிடையே, தந்தை மறைவு குறித்து ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “நான் உங்களை நேசித்தேன், என் வாழ்நாள் முழுவதும் உங்கள் அன்பிற்காக ஏங்கினேன். நீங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு இறந்துவிட்டீர்கள். இன்று தான் நான் அறிந்தேன். அது என் இதயத்தை இன்னும் உடைக்கிறது. இந்த படம் தான் உங்களிடம் இருந்து எனக்கு கிடைத்ததெல்லாம். இந்த படம் தான் என்னிடம் எப்போதும் இருக்கும். நான் உங்களை இழக்கிறேன். rest in peace. ” எனக் குறிப்பிட்டு உள்ளார். ஷெரின் தந்தை மறைவுக்கு ரசிகர்கள், திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை ஷெரின் தமிழ் திரையுலகில் அறிமுகமானதில் இருந்தே பலராலும் விரும்பப்பட்டு நேசிக்கப்படுகிறார். செல்வராகவன் இயக்கிய, துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததற்காகவும் அவர் நன்கு அறியப்பட்டவர். விசில் திரைப்படம் ஷெரினுக்கு அதிக புகழைப் பெற்றுத் தந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிக்பாஸ் தமிழ் சீசன் 4 இல் ஷெரின் கலந்து கொண்டார். கவின், சாண்டி மாஸ்டர், தர்ஷன், லாஸ்லியா உள்ளிட்ட போட்டியாளர்களுடன் கலக்கலாக இருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு அவரின் மார்கெட் அதிகமான காரணத்தினால், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் அவரின் குணம் அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக புகழுடன் அவர் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை. அதனாலேயே அவரின் இயல்பான குணம் அனைவருக்கும் பிடித்தது.

Read More : வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!! அதிரடியாக உயருகிறது டிவி சேனல்களுக்கான டிஷ் கட்டணம்..!!

English Summary

Actress Sherin of Bigg Boss fame has been living without her father’s upbringing. He once said that only his mother raised him. In this case, actress Sherin’s father passed away a week ago.

Chella

Next Post

Israeli Strike On Gaza School: காசாவில் உள்ள ஐ.நா பள்ளிக்கூடத்தில் குண்டு வீச்சு : 30 பேர் பலி

Thu Jun 6 , 2024
30 people, including children, were killed in an Israeli attack on a Gaza school camp. The military said it was used as a Hamas compound.

You May Like