fbpx

’நீங்க வந்தா மட்டும் போதும்’..!! ’பேருக்கு தான் மசாஜ் சென்டர்’..!! ’ஆனா நடக்குறது பலான லீலை’..!! தட்டித்தூக்கிய போலீஸ்..!!

தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் புற்றீசல் போல் மசாஜ் சென்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதும் போலீசார் நடவடிக்கையில் ஈடுபடுவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள குடிமல்காபூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குடியிருப்பு ஒன்றில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். பின்னர், பாலியல் தொழில் நடப்பது உறுதியானதை அடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டரில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 5 பெண்கள் மற்றும் ஆண் ஒருவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மீட்கப்பட்ட 5 பெண்களும் காப்பாகத்தில் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, அந்த ஆண் நபரை மட்டும் கைது செய்தனர்.

மசாஜ் சென்டர்கள், ஸ்பா ஆகியவை எங்காவது இருந்தால் அந்த கட்டிடங்களின் உரிமையாளர்கள் அவற்றை உடனடியாக காலி செய்ய வைக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தவறினால், கட்டிட உரிமையாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

Chella

Next Post

”திருப்பாதீங்க திருப்பாதீங்க”..!! கேமராவை பார்த்ததும் முகத்தை மூடிக்கொண்டு ஓடிய விக்ரமன்..!!

Tue Jan 9 , 2024
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் விக்ரமன். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செய்தித் தொடர்பாளராகவும் இருந்து வருகிறார். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பெண் மோசடி புகாரில் சிக்கினார். அதாவது, கடந்த சில மாதங்களாகவே, விக்ரமன் மீது இளம்பெண் ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். இதேபோல் இளம்பெண்ணுடன் விக்ரமன் உரையாடிய வாட்ஸ் அப் சாட்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், இதற்கு விக்ரமன் தரப்பு மறுப்பு தெரிவித்தது. தொடர்ந்து […]

You May Like