fbpx

’வழக்கு எல்லாம் எனக்கு துணி கடையில் கட்டைப்பை வாங்கி வருவது போல’..!! காவல்துறையை வம்பிழுத்த டிடிஎஃப்..!!

‘வழக்கு எல்லாம் எனக்கு துணி கடைக்கு சென்று கட்டைப்பை வாங்கி வருவது போல’ என்றும் காவல்துறை பொய்யான காரணங்களை கூறி இளைஞர்கள் மீது தடியடி நடத்தியுள்ளதாகவும் யூடிபர் டிடிஎஃப் வாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் செந்தில் செல்வம்
என்ற இயக்குநரின் அலுவலக திறப்புக்காக சிறப்பு விருந்தினராக யூடிபர் டிடிஎஃப் வருகை தந்தார். அவரைக்கான பள்ளி மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை அப்பகுதியில் குவிந்து பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டனர். இதற்காக காவல்துறை அறிவிப்பு கொடுத்தும் கலையாத அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். மேலும் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக டிடிஎஃப் வாசன், இயக்குநர் செந்தில் செல்வம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது.

’வழக்கு எல்லாம் எனக்கு துணி கடையில் கட்டைப்பை வாங்கி வருவது போல’..!! காவல்துறையை வம்பிழுத்த டிடிஎஃப்..!!

இதனையடுத்து அந்த நிகழ்வு தொடர்பாக புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள டிடிஎஃப் வாசன், “பொய்யான காரணங்களை கூறி மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளதாகவும், வழக்குப்பதிவெல்லாம் எனக்கு துணிக்கடைக்கு சென்று கட்டைப்பை வாங்கி வருவது போல் என்றும், எனக்கு நிச்சயம் ஒரு காலம் வரும் எனவும் வழக்குப்பதிவெல்லாம் எனக்கு வழக்கமான ஒன்று தான் என அவர் தெரிவித்துள்ளார். 44 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் எதிர்காலத்தில் இதற்கான அனைத்து விடைகளும் கிடைக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Chella

Next Post

திருநெல்வேலி காவல் கண்காணிப்பாளர் கைது செய்ய உத்தரவுக்கு தடை - நீதிமன்றம் அதிரடி...

Mon Dec 19 , 2022
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணனை கைது செய்து ஆஜர்படுத்தும்படி, தமிழ்நாடு மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், சிவந்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பரமானந்தம் என்ற பட்டியல் இனத்தை சேர்ந்தவரின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, வழி மறிக்கப்பட்டு, வேலியிடப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் அறிக்கை தாக்கல் செய்ய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு, […]
இந்தியாவின் மிகப் பழமையான வழக்கு..!! 72 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது..!!

You May Like