fbpx

புதுசா இருக்கே!. கன்னித் தன்மையை மீட்டெடுக்க அறுவை சிகிச்சை!. ரூ.16 லட்சம் செலவு!. இளம்பெண்ணின் விபரீத முடிவு!

Virginity: பிரேசிலில் மீண்டும் கன்னித்தன்மையை உணர வேண்டும் என்பதற்காக இளம்பெண் ஒருவர் ரூ.16 லட்சம் செலவில் ஹைமனோபிளாஸ்டி என்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரேசில் நாட்டை சேர்ந்த இளம்பெண் ரவேனா ஹன்னிலி. 23 வயது இன்ஸ்டா பிரபலமான இவரை 2, 66,000க்கும் அதிகமானோர் பின் தொடர்ந்துவருகின்றனர். இந்தநிலையில், ரவேனா மீண்டும் கன்னித்தன்மையை மீட்டெடுக்க விரும்புவதாகவும், இதற்காக ரூ.16 லட்சம் செலவில் ஹைமனோபிளாஸ்டி என்ற அறுவை சிகிச்சை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரவேனா ஹன்னிலி கூறியதாவது, “நான் மீண்டும் கன்னியாக மாற விரும்புகிறேன். இது ஒரு பெண் எப்படி உணர்கிறாள் மற்றும் அவள் தனக்காக எதை விரும்புகிறாள் என்பதைப் பற்றியது. இது எனது சுயமரியாதை மற்றும் ஆழ்ந்த தனிப்பட்ட காரணங்களைப் பற்றியது. துரதிர்ஷ்டவசமாக, இதுபோன்ற நெருக்கமான தேர்வுகளை அனைவரும் புரிந்துகொள்வதில்லை அல்லது ஆதரிப்பதில்லை. அவற்றிலிருந்து விலகி, நாம் தனிப்பட்ட முடிவுகளை மதிக்கத் தொடங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஹைமனோபிளாஸ்டி என்றால் என்ன? ”ஹைமனோபிளாஸ்டி என்பது கருவளையத்தை (கன்னித்திரை) மறுகட்டமைப்பதற்காகச் செய்யப்படும் ஓர் அறுவைச் சிகிச்சை ஆகும். கருவளையம் என்பது பெண்ணின் பிறப்புறுப்புக்குள் இருக்கும் மெல்லிய சளி சவ்வு ஆகும். இது ஒரு தடையாக செயல்படுகிறது. பெண்ணின் முதல் உடலுறவின்போது கருவளையம் உடைகிறது அல்லது கீறல் விடுகிறது. இந்த மென்மையான தசை உடைவதால் சிறிது ரத்தம் வரலாம். அதேநேரத்தில் தீவிரமான உடற்பயிற்சிகள், ஜிம்னாஸ்டிக்ஸ், குதிரையேற்றம், நீச்சல், சைக்களிங் போன்றவற்றால்கூட கருவளையம் உடைந்து போகலாம் அல்லது கிழிந்துபோகலாம்” என்கின்றனர் மருத்துவர்கள்.

இந்த அறிவிப்புக்கு மருத்துவர்கள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர். லண்டனை தளமாகக் கொண்ட மெடிசனல் கிளினிக்கின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஹனா சலுசோலியா, ”இது ஓர் ஒப்பனை செயல்முறையாக அங்கீகரிக்கப்பட்டாலும், கன்னித்தன்மையை மீட்டெடுக்காது. மேலும் இதன்மூலம் தொற்று, தழும்புகள் மற்றும் ஒழுங்கற்ற குணமடைதல் போன்ற அபாயங்கள், முடிவுகளில் அதிருப்தி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், வெற்றிகரமான ஹைமனோபிளாஸ்டி அறுவைச்சிகிச்சைக்குப் பிறகு பெரும்பாலான பெண்கள் தங்கள் முதல் உடலுறவின்போது கன்னித்திரை கிழிந்து ரத்தம் கசிதலை உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளனர். இருப்பினும், ஹன்னிலி இந்த முடிவில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த ஆண்டு பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஜூலியா மெடிரோஸ் என்ற 23 வயதான அழகி, இதே அறுவைச்சிகிச்சையைச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: அடடே..!! பருத்தி பாலில் இவ்வளவு மருத்துவ குணங்களா..? வீட்டிலேயே செய்வது எப்படி..?

Kokila

Next Post

உடல் எடையை குறைக்க வேண்டும், ஆனால் ஓட்ஸ் சாப்பிட பிடிக்கவில்லையா? அப்போ இதை செஞ்சு பாருங்க..

Fri Dec 6 , 2024
oats-upma-recipe-for-weight-loss

You May Like