fbpx

’இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு’..!! இடி மின்னலுடன் 27 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை..!!

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று இரவு 7 மணிக்குள் சென்னை உட்பட 27 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதிகளில் விட்டு விட்டு கனமழையும், கடலோரப் பகுதிகளில் பலத்த மழை தற்போது பெய்து வருகிறது. மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம், சித்தாமூர், செய்யூர், பனையூர், சூனாம்பேடு உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

Chella

Next Post

மழையால் மூழ்கும் சென்னை..! இரவு 10 மணி வரை மழை தொடரும்..! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா..?

Wed Nov 29 , 2023
சென்னை உட்பட 25 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தகவல் அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு மணடலம் நெருங்கி வரும்பட்சத்தில் தான் […]

You May Like