fbpx

’மூளை அறுவை சிகிச்சை முடிந்து ஒரு மாதம் தான் ஆச்சு’..!! அதற்குள் சத்குரு செய்த வேலைய பாத்தீங்களா..?

ஈஷா அறக்கட்டளை நிறுவனரான சத்குருவுக்கு கடந்த மாதம் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. அவர், டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சத்குருவுக்கு கடுமையான தலைவலி இருந்ததாகவும், பின்னர் அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு இருப்பதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

மார்ச் 17ஆம் தேதி மண்டை ஓட்டில் ஏற்பட்ட ரத்தக்கசிவை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது” என்று டெல்லி அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவமனை தெரிவித்தது. மேலும், சத்குரு தனது மருத்துவமனை படுக்கையில் இருந்து அறுவை சிகிச்சை குறித்து வீடியோ பதிவு செய்தார். இந்த சூழலில், மூளை அறுவை சிகிச்சை செய்த ஒரு மாதத்திற்குப் பிறகு சத்குரு மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளார்.

நேற்று நடந்த மக்களவை தேர்தலில் வாக்களித்தார். இதை தொடர்ந்து இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியா இடையேயான ஆன்மீக மற்றும் கலாச்சார இழைகளை ஆராய்வதற்காக 10 நாள் பயணமாக இந்தோனேசியாவின் பாலி சென்றடைந்தார். அங்கு சுற்றுலாத் துறை அமைச்சர் திரு. சந்தியாகா யூனோ மற்றும் பாலியில் உள்ள இந்திய தூதர் டாக்டர் ஷஷாங்க் விக்ரம் உள்ளிட்டோர் சத்குருவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சத்குரு ஆகியோர் கம்போடியாவுக்குச் செல்வதற்கு முன் நாட்டில் உள்ள பல்வேறு ஆன்மீகத் தலங்களுக்குச் செல்ல உள்ளார்.

சத்குரு தனது பயணத்தின் போது, கலாச்சாரங்கள் மற்றும் கோவில்களின் பின்னணியில் உள்ள அறிவியலை ஆராய உள்ளார். பாலியில் உள்ள பெசாகி மற்றும் தீர்தா எம்புல் கோவில்கள் உட்பட பல்வேறு புராதன ஆற்றல் இடங்களை பார்வையிட இருக்கிறார். இந்தோனேசியா மற்றும் கம்போடியாவில் சத்குரு மேற்கொண்ட ஆழமான ஆய்வு, 2023இல் மட்டும் சமூக ஊடகங்களில் 4.37 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. மேலும் அவரின் வீடியோக்களை தவறாமல் பார்க்கும் பில்லியன் கணக்கானவர்களுக்கு விலைமதிப்பற்ற நுண்ணறிவுகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : தனியார் பள்ளிகளில் இலவச கல்வி..!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Chella

Next Post

ஆன்லைன் டிரேடிங்கில் நஷ்டம்..! நிறைமாத கர்ப்பிணி மனைவி..! கணவன் எடுத்த விபரீத முடிவு..!

Sat Apr 20 , 2024
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பேகேப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(27), இவருக்கு சந்தியா என்ற மாணவி உள்ளார். காதலித்து வந்த விஜயகுமார் மற்றும் சந்தியா கடந்தாண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர் புதுமண தம்பதியாக சுற்றிவந்த நிலையில் சந்தியா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இன்னும் சில தினங்களில் பிரசவம் ஏற்படலாம் என மருத்துவர்கள் குறிப்பிட்டிருந்தனர். இதனால் இரு குடும்பங்களும் புதுவரவை வரவேற்க ஆவலாய் இருந்துள்ளனர். ஆண்ளை அவர்கள் எதிர்பாராத சம்பவம் […]

You May Like