fbpx

காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது!… அரசு ஊழியர்களுக்கு உயரும் அகவிலைப்படி!… அப்படினா சம்பளம் எவ்வளவு?

மத்திய மற்றும் மாநில அரசுகள் பொது மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்த வகையில், சமீபத்தில் தான் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள பயனாளர்களுக்கு சிலிண்டரின் மானிய விலையை ரூ. 200 லிருந்து, ரூ. 300-ஆக உயர்த்தி அறிவித்தது. இதையடுத்து, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி எப்போது அறிவிக்கும் என எதிர்பார்க்க தொடங்கி உள்ளனர்.

நவராத்திரி விழா காலம் வர உள்ள நிலையில், மத்திய அமைச்சரவை வரும் அக்டோபர் 15 ஆம் தேதிக்கு மேல், அகவிலைப்படி உயர்வு குறித்த அப்டேட்டை வெளியிடும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மத்திய அரசு அறிவித்த பிறகு ஒவ்வொரு மாநில அரசும், உள்ளூர் நிலவரத்துக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

அந்தவகையில், தற்போதுள்ள 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக 4 சதவீத அகவிலைப்படி உயர்வை அரசு அறிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 7வது மத்திய ஊதியக் குழுவின் (7th Central Pay Commission) பரிந்துரைகளின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட ஃபார்முலா, டிஏவை உயர்த்துவதற்குப் பின்பற்றப்படும். 46% அகவிலைப்படி (DA Hike) உயர்வுக்குப் பிறகு மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்: ரூ.18,000 அடிப்படை சம்பளத்தில், ஆண்டு டிஏ உயர்வு ரூ.8640 ஆகவும், ரூ.56,900 அடிப்படை சம்பளத்தில் ஆண்டு டிஏ உயர்வு 27,312 ஆகவும் இருக்கும்.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் அகவிலைப்படி என்பது 4 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. இதன்மூலம் மொத்த அகவிலைப்படி சதவீதம் 42 சதவீதமாக அதிகரித்தது. தற்போதைய சூழலில் பணவீக்க விகிதம் அடிப்படையில் 4 சதவீதம் வரை அகவிலைப்படியை உயர்த்தப்பட்டால் மொத்த அகவிலைப்படி சதவீதம் என்பது 46 என அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

முடங்கும் 8 மாவட்டங்கள்..!! டெல்டாவில் இன்று முழு அடைப்பு..!! பொதுமக்கள் கடும் அவதி..!!

Wed Oct 11 , 2023
தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாஜக மற்றும் கன்னட அமைப்புகளை கண்டித்து இன்று டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய பரிந்துரையை ஏற்று தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு உரிய நேரத்தில் தேவையான நீரை திறந்து விடாமல் பிடிவாதமாக உள்ளது. இதனால், டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் கருகிய நிலையில், […]

You May Like