முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றிருப்பதாகதகவல்கள் வைரலாகி வருகின்றது.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா 1974ல் பிறந்தார். ஆதர்ஷ் வித்தியாலயாவில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் சென்னைபல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார். மதுரை காமராஜர் பல்கலையில் ஆங்கிலப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். டைம்ஸ் பத்திரிகையில் சில காலம் பணியாற்றினர். பின்னர் வெளிநாட்டிற்கு சென்றார். ஜெயலலிதாவன் தாயார் இருந்தவரை போயஸ் தோட்டத்தில் தீபாவின் தந்தை ஆகியோர் ஒரே குடும்பமாக வசித்து வந்தனர்.
பின்னர் அவர் இறந்ததால் டி.நகருக்கு தீபாவின் தந்தை குடும்பத்துடன் குடியேறினார். 2012-ல் திருமணம் செய்து கொண்ட நிலையில் 10 வருடங்களாக குழந்தை இல்லை. இதற்காக பல கட்ட மருத்துவ முயற்சிகள் மேற்கொண்டபோதும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்களிடையே தகராறு ஏற்பட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது. தனது கணவர் தன்னை பிரிந்துவிடுவதாக கூறி பேட்டி அளித்திருந்தார். விவாகரத்து கேட்டு தொல்லை கொடுப்பதாக தெரிவித்திருந்தார்.
இது பற்றி பின்னர் அவர் விளக்கமளித்தபோது தீபாவின் உடல்நிலையில் முழு அக்கறையுடன் இருப்பதாகவும் தற்போது கூட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போன்ற வேலைகளை நான்தான் செய்கின்றேன் என விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் இருவருக்கும் குழந்தை பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குழந்தை வாடகைத் தாய் மூலம் நயன்-விக்கி பாணியில் பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வரவில்லை. ஆனால் குழந்தை பிறந்துள்ளது என்பதை உறுதி செய்துள்ளார்.