fbpx

போதைப்பொருள் கடத்தல்: ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இயக்குனர் அமீர்.! ‘NCB’ வெளியிட்ட பரபரப்பு தகவல்.!

போதைப்பொருள் கடத்தல்: இன்று கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மற்றும் இயக்குனர் அமீர் இடையே தொடர்பு இருப்பதாக NCB தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து போதைப் பொருட்களை ஏற்றுமதி செய்ததாக தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டனர். போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையின் அறிவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த மூன்று வருடங்களில் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் கடத்தப்பட்டது தெரிய வந்தது.

மேலும் தமிழ் சினிமா தயாரிப்பாளரும் பிரபல தொழிலதிபருமான ஜாபர் சாதிக் என்பவர் இந்த கும்பலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தலைமறைவான இவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நீண்ட நாள் தேடுதல் வேட்டைக்கு பிறகு ஜாபர் சாதி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் என்சிபி காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி இருக்கிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தெரிவித்த என்சிபி தலைவர் கியானேஸ்வர் சிங்” போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் இயக்குனர் மற்றும் நடிகரான அமீருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறார். டாபர் சாதிக் போதை பொருட்கள் மூலம் கிடைத்த படத்தை திரைப்படங்களில் முதலீடு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதில் பல சினிமா பிரபலங்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்த அவர் யார் யார் இருக்கிறார்கள் என்ற விவரங்களை இப்போது தெரிவிக்க முடியாது எனக் கூறியிருக்கிறார். மேலும் இயக்குனர் அமீர் உள்ளிட்டோர் விரைவில் விசாரணை வளையத்திற்குள் உட்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Read More: Raid: விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED அதிகாரிகள் சோதனை…!

Next Post

LOK SABHA | அமித் ஷா நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வி.! பாஜகவுக்கு மகாராஷ்டிராவில் தொடரும் சிக்கல்.!

Sat Mar 9 , 2024
2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. தற்போது இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்து வருகிறது மேலும் மாநிலங்களில் உள்ள கூட்டணி கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை […]

You May Like