பொதுத்துறை நிறுவனமான THDC (Tehri Hydro Development Corporation Limited) நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 14ஆம் தேதிக்குள் இப்பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்
☑ பணி : Engineer
Civil – 30
Electrical – 25
Mechanical – 20
Environment – 8
Geology & Geo Technical – 7
Mining – 7
Wind Power Projects – 2
மொத்த காலியிடங்கள் : 129
கல்வித் தகுதி :
* பொறியியல் துறை பிரிவில் 60% மதிப்பெண்களுடன் BE அல்லது B.Tech முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* இதர பிரிவுகளுக்கு Geology, Applied Geology, Geological Technology பிரிவில் 60% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (ஓராண்டு பணி அனுபவம் அவசியம்).
ஊதிய விவரம் :
Tehri Hydro Development Corporation Limited நிறுவனத்தில் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
☑ பணி : Executive (Human Resource)
காலியிடங்கள் : 15
கல்வித் தகுதி :
Personnel Management, IR, Labour Welfare பிரிவில் 60% மதிப்பெண்களுடன் எம்பிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (ஓராண்டு பணி அனுபவம் தேவை)
☑ பிரிவு : Finance
காலிப்பணியிடங்கள் : 15
கல்வித் தகுதி : சிஏ, சிஎம்ஏ தேர்ச்சியுடன் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் : ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை சம்பளம்
தேர்வு செய்யப்படும் முறை :
* எழுத்துத் தேர்வு
* சிபிடி தேர்வு
* நேர்முகத்தேர்வு
விண்ணப்பக் கட்டணம் :
விண்ணப்பக் கட்டணம் ரூ. 500. எஸ்சி/எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் முழு விலக்கு.
விண்ணப்பிக்கும் முறை :
https://www.thdc.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.3.2025