மத்திய அரசு ஊழியர்களுக்கு வரவுள்ள தேர்தலை முன்னிட்டு ஏராளமான பலன்கள் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்திலேயே நடப்பு தவணைக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்கள் 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீத அகவிலைப்படி உயர்வை பெறுவார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டியுள்ளதால், இவர்களுக்கான வீட்டு வாடகை படி மற்றும் இதர சலுகையையும் கூடுதலாக பெறுவார்கள்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு அரசு ஊழியர்களை ஈர்க்கும் வகையில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 18 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையும் விரைவில் வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக கோரிக்கையாக இருந்து வந்த ஓய்வூதிய திட்டத்திற்கான விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி புதிய பென்ஷன் திட்டத்தில் ஊழியர்கள் இறுதியாக வாங்கிய வருமானத்தில் 40 முதல் 45 சதவீதம் வரை பென்ஷனாக கிடைக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : Income | ஊழியர்களின் சம்பளம் அதிரடியாக உயரப்போகிறது..!! மத்திய அரசு எடுத்த மாஸ் முடிவு..!!