மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்தாண்டுக்கான 2-வது அகலவிலைப்படி உயர்வு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக பலர் காத்திருந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பணியாற்றும் பாதுகாப்பு சிவில் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் உள்ள விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டு, புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மாற்றம் 7-வது ஊதிய குழுவின் கீழ் ஊதியம் பெரும் அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பதவி உயர்வு வழங்குவதற்கான தகுதி சர்வீஸ் அடிப்படையில் ஒவ்வொரு நிலைக்கு ஏற்ப 1 முதல் 12 ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செப். 27ஆம் தேதி அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அக்டோபர் 1ஆம் தேதி முதல் அது அமலாகும் என்று கூறப்படுகிறது.