fbpx

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!! உயருகிறது சம்பளம்..!! நாளை வெளியாகிறது அறிவிப்பு..?

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அதிகரிப்பது குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3- 4% உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு கோடி குடும்பங்களுக்கு நேரடி பலனை அளிக்கும். இதுவரை 8-வது ஊதியக் குழுவை அமைக்காதது பலருக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. இந்நிலையில் தான், அரசு ஊழியர்களின் கோபத்தை தணிக்கும் விதமாக விரைவில் டிஏ உயர்வு அறிவிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

DA அதிகரிப்புக்கான தேதியை அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், நாளை அந்த அறிவிப்பு வரலாம் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. DA 3- 4% உயர்ந்தால், அது 53 அல்லது 54% ஆக அதிகரிக்கும். இது தற்போதைய 50% இல் இருந்து குறிப்பிடத்தக்க உயர்வு ஆகும். உதாரணமாக, ஒருவர் மாதம் ரூ.50,000 சம்பாதித்தால், அவர் ஒவ்வொரு மாதமும் ரூ.1,500 அதிகமாகப் பெறுவார்.

அதாவது, 51,500 ரூபாய் சம்பளம் பெறுவார். நாளை இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்திற்கு பின் இது தொடர்பான அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இது போக ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு கீழ் பென்சன் மட்டுமன்றி அகவிலைப்படியும் சேர்ந்து வழங்கப்படும்.

Read More : லட்டு குறித்து பேசி சர்ச்சையில் மாட்டிக் கொண்ட கார்த்தி..!! பவன் கல்யாணிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டு பதிவு..!!

English Summary

An announcement is expected to be made tomorrow on increasing the dearness allowance of central government employees.

Chella

Next Post

"3 நாள் ஆபீஸ் + 2 நாள் வீடு".. HCL நிறுவனம் தரும் சூப்பர் வாய்ப்பு..!! மதுரையிலேயே பணி.. மிஸ் பண்ணிடாதீங்க!!

Tue Sep 24 , 2024
HCL company operating in Madurai has released the notification to fill the vacancies. Candidates for this job can work in hybrid mode.

You May Like