ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வெளியிட்ட வீடியோவில் தீபாவளி போனஸ் குறித்து அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில், “டெல்லி அரசு ஊழியர்களில் குரூப் பி மற்றும் குரூப் சி ஊழியர்களுக்கு தலா ரூ.7,000 தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 80,000 ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவதால், அதற்காக டெல்லி அரசு ரூ.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கூறியிருக்கிறார். டெல்லி அரசில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் எங்களது குடும்ப உறுப்பினர்கள் ஆவர். தீபாவளியன்று அவர்களின் குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவற்காக போனஸ் வழங்கப்படுகிறது. டெல்லி மக்களுக்கும், டெல்லியில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.