fbpx

இந்தாண்டு இறுதிக்குள் மஹிந்திரா கார் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்..!! தரமான தள்ளுபடி இருக்கு..!!

இன்னும் சில வாரங்களில் 2023ஆம் ஆண்டு நிறைவு பெற இருக்கிறது. பண்டிகைக் கால ஆஃபர்கள் ஒருபுறம் இருக்க, ஆண்டின் இறுதியிலும் விற்பனையை அதிகரிப்பதற்காக பல்வேறு நிறுவனங்கள் சலுகைகளை வழங்குகின்றன. நடப்பாண்டில் முன்னெப்போதைக் காட்டிலும் இந்தியாவில் பைக் மற்றும் கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது. கார்களின் விற்பனையில் நடப்பாண்டில் உலக அளவில் 3ஆம் இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.

2023இன் இறுதியிலும் வாடிக்கையாளர்களை கவருவதற்காக மாபெரும் டிஸ்கவுண்டுகளை அறிவித்துள்ளது மஹிந்திரா நிறுவனம். அதிலும் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள XUV300 மற்றும் XUV400 ஆகியவற்றுக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. XUV300 மற்றும் XUV400 ஆகிய கார்களின் சில பிரத்யேக வேரியண்டுகளுக்கு மட்டுமே இந்த டிஸ்கவுண்ட் பொருந்தும். இந்த சலுகையை பெறுவதற்கு அருகாமையில் உள்ள அங்கீகாரம் பெற்ற டீலரை அணுக வேண்டும் அல்லது மஹிந்திரா நிறுவனத்தின் இணையதளத்தில் இந்த ஆஃபரை பெற்றுக் கொள்ளலாம்.

எவ்வளவு சலுகை கிடைக்கும்..?

XUV400 மாடல் காருக்கு ரூ.4.2 லட்சம் வரையில் சலுகையும், XUV300 மாடலுக்கு ரூ.1.72 லட்சம் வரையில் சலுகை பெற்றுக் கொள்ளலாம். வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சலுகையில், கூடுதல் காலத்திற்கான வாரண்டி, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், கேஷ்பேக், கார்பரேட் டிஸ்கவுண்ட், கூடுதல் இணைப்பு பொருட்களுக்கான தள்ளுபடி போன்ற பலன்கள் கிடைக்கும்.

Chella

Next Post

குஜராத்தின் பாரம்பரிய நடனமான 'கர்பா'- க்கு யுனெஸ்கோ அங்கீகாரம்!

Thu Dec 7 , 2023
குஜராத்தின் பாரம்பரிய நடமான ‘கர்பா’ நடனத்தை கலாசார பாரம்பரிய பட்டியலில் இணைத்து யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இந்தியாவில் பெருவாரியான மக்கள் சரஸ்வதி பூஜை, நவராத்திரி , தீபாவளி , விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பல விழாக்களை ஒருமித்தே கொண்டாடுகின்றனர். குறிப்பாக நவராத்திரி என்பது வட இந்தியாவில்தான் மிகவும் பிரபலம். 9 நாட்கள் 9 தேவிகள் என நடத்தப்படும் பூஜையின் ஒவ்வொரு நாள் இரவு பொதுமக்கள் ஒன்றுக்கூடி கொண்டாடுவார்கள். இந்த 9 நாட்களில் […]

You May Like