fbpx

இறந்த தந்தையால் மகனுக்கு அடித்த ஜாக்பாட் பரிசு..!! ஒரே கனவால் லட்சாதிபதியான அதிசயம்..!!

இறந்த தந்தை கனவில் வந்து லொத்தர் இலக்கம் கூறியதால் பல லட்சம் ரூபாய் பண பரிசு பெற்ற நபரின் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாக வீடுகளில் பெற்றோர் இறந்த பின்னர் அவர்கள் கனவில் வந்து சில முடிவுகள் கூறினார்கள் என்று பலரும் கூறி மகிழ்ந்ததை பார்த்திருப்போம். அந்த வகையில், கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தின் பர்லிங்டன் பகுதியைச் சேர்ந்த மைக்கல் டேய்லர் என்ற 50 வயதான ட்ரக் சாரதி என்பவரின் தந்தை ஒருவர் கனவில் வந்துள்ளார். அவர் கனவில் வந்தது மட்டுமின்றி, லொத்தர் சீட்டிற்கான ஒரு இலக்கத்தை கூறியுள்ளார். இதனை ஞாபகம் வைத்து குறித்த இளைஞரும் லொத்தர் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், குறித்த நபர் சுமார் கடந்த 30 ஆண்டுகளாக இவர் லொத்தர் சீட்டிலுப்பு விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றார். ஆனால், அவருக்கு பெரிதாக லாபம் ஏதும் வராமல் இருந்த காரணத்தினால், தந்தையின் பேச்சை கேட்டு லொத்தர் சீட்டை எடுத்த காரணத்தினால் இவருக்கு ஒரு லட்சம் டாலர் பணப்பரிசு கிடைத்துள்ளது. அவரின் வெற்றியை சமூக வலைதளங்களில் தந்தைக்கு நன்றி கூறி பகிர்ந்துள்ளார். மேலும் இவரின் செய்தி பார்த்த பலரும், “எங்கள் கனவில் யாரும் இது போல் வருவது இல்லையே” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

Chella

Next Post

“ சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான, பழமைவாய்ந்த மொழி..” ஆளுநர் ரவி பேச்சு..

Thu Apr 13 , 2023
சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான, பழமைவாய்ந்த மொழி என்று தமிழக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ‘ தமிழ்நாடு தரிசனம்’ என்ற தலைப்பில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி “ தமிழ் மீது ஒருபோதும் இந்தியை திணிக்க முடியாது.. இந்தியாவில் ஆன்மீக மற்றும் கலாச்சாரத்தின் தலைநகராக தமிழ்நாடு தொடர்ச்சியாக விளங்குகிறது.. இந்தியை […]

You May Like