தொடக்க வேளாண்மை கூட்டு வங்கிகளில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் நடைமுறை தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், ”தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழக்கப்படும் என்று அறிவித்துள்ளார். விவசாயிகள் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பித்து, ஒரு வாரத்திற்கு பின் அக்கடனைப் பெறும் நடைமுறை தற்போது இருந்து வரும் நிலையில், அதில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்கும் வகையில், இணையவழியில் பயிர்க்கடன் விண்ணப்பிக்கும் நடைமுறையும், விண்ணப்பித்த அன்றே வங்கிக் கணக்கில் பயிர்க்கடனை நேரடியாக வழங்கும் நடைமுறையும் தருமபுரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு, பின்னர் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், ”நிலமற்ற பெண் விவசாயத் தொழிலாளர்கள், நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ள நிலமற்ற பெண் விவசாயத் தொழிலாளர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், அவர்களின் பெயரில் 2 ஏக்கர் வரை விவசாய நிலம் வாங்க ரூ.5 லட்சம் வரை கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
Read More : இனி அரசு அலுவலகங்களுக்கு போக வேண்டாம்..!! நில உரிமையாளர்களே செம குட் நியூஸ்..!! இருந்த இடத்தில் இருந்தே வேலையை முடிக்கலாம்..!!