fbpx

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்..!! பிப்.1இல் வெளியாகிறது சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு..?

கடந்த 2013ஆம் ஆண்டு 7-வது ஊதியக்குழு அறிவிக்கப்பட்ட நிலையில், அது 2016ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. எப்போதுமே 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக்குழு மாற்றப்படுவது வழக்கம் என்பதால், 8-வது ஊதிய குழு எப்போது அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே, 8-வது ஊதியக்குழுவை அமல்படுத்துவது தொடர்பாக அரசு தரப்பில் விவாதம் நடைபெற்று வருவதாகவும், விரைவில் புதிய ஊதியக்குழு அமல்படுத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியது. ஆனால், மழைக்கால கூட்டத்தொடரின்போது, 8-வது ஊதியக் குழுவை உருவாக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய அரசு கூறிவிட்டது.

இந்த நிலைப்பாட்டில் மாற்றம் வரலாம் என்று சொல்லப்பட்டது. இதற்கு காரணம், ஜனவரியில் அகவிலைப்படி அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அந்தவகையில், சம்பள திருத்தம் ஏற்பட வேண்டுமானால், சம்பள கமிஷனை உருவாக்க வேண்டியது அடிப்படையான விஷயமாகும். இதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. கடந்த 2013 எம்பி தேர்தலுக்கு முன்பே, 7-வது ஊதியக்குழு அமைக்கப்பட்டது. இப்போதும் எம்பி தேர்தல் வரப்போகிறது. அதனால், முன்கூட்டியே 8-வது ஊதியக்குழு அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1அஅம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. எம்பி தேர்தலுக்கு முன்னதாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால், ஸ்பெஷலானதாக பார்ப்படுகிறது. அதுமட்டுமின்றி, மோடி அரசின் 2-வது ஆட்சியின் கடைசி பட்ஜெட் இது என்பதால், அதைவிட ஸ்பெஷலாக பார்க்கப்படுகிறது. அதனால்தான், தேர்தலை கருத்தில் கொண்டு, பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பட்ஜெட் தொடரின்போது அரசு ஊழியர்களின் ஊதியம் குறித்து முடிவெடுக்கலாம் என்றும் தகவல்கள் கூறப்படுகிறது. குறிப்பாக, ஃபிட்மெண்ட் காரணி உயர்த்தப்படலாம் என தெரிகிறது. நீண்ட நாட்களாக இதைத்தான் அரசு ஊழியர்களும் கோரிக்கையாக விடுத்து வருகின்றனர். இப்போதைக்கு ஃபிட்மெண்ட் காரணி 2.57 ஆகவும், அடிப்படை ஊதியம் ரூ.18,000 ஆகவும் உள்ள நிலையில், 3.68 ஆக உயர்த்த வேண்டும் என்று ஊழியர்கள் கேட்டு வருகின்றனர். எனவே, 48 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பள உயர்வு குறித்து, வரப்போகும் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

பரபரப்பு: "சாதி பெயர் குறிப்பிட்டு விவசாயிகளுக்கு சம்மன்.." நிர்மலா சீதாராமன் பதவி விலக கோரி ஜிஎஸ்டி ஆணையர் உண்ணாவிரதம்.!

Wed Jan 17 , 2024
சேலம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு சாதி பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்திய வருவாய்த்துறை மற்றும் ஜிஎஸ்டி துணை ஆணையர் உண்ணாவிரதம் இருக்கும் நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து ஜனாதிபதிக்கும் புகார் மனு ஒன்றையும் அனுப்பி இருக்கிறார் . சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அப்பம்மா சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ஏழை விவசாயிகளான […]

You May Like