fbpx

ஓபிஎஸ்-க்கு அடித்த ஜாக்பாட்..!! பாஜக கூட்டணியின் போட்டியிடும் தொகுதிகள்..!! ராஜ்யசபா சீட் கன்பார்ம்..!!

பாஜக கூட்டணியில் போட்டியிடும் ஓபிஎஸ் அணிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் அணி இணைந்து போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. என்னதான் அவர் நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவேன் என்று கூறினாலும், அவருக்கு தாமரை சின்னத்தில் போட்டியிட 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தேனி, மதுரை மற்றும் தஞ்சை ஆகிய தொகுதிகள் ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி ஓபிஎஸ் மகனுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படும் என்றும் ஒருவேளை நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து விட்டாலும், தனது மகன் நாடாளுமன்றத்திற்கு செல்வது உறுதி என்றும் ஓபிஎஸ் தனது தரப்பிடம் கூறி வருவதாக தெரிகிறது. இந்நிலையில், இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதாகவும் எப்படியாவது அந்த சின்னத்தை பெற்று விட வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர் உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

Chella

Next Post

புதன்கிழமை அன்று பெண்கள் இதை செய்தால், வீட்டில் உணவுக்கு பஞ்சம் இருக்காது..! செல்வம் செழிக்கும்..!

Wed Feb 7 , 2024
பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தின் படி ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியே முறையாக ஒரு சில விஷயங்களை பின்பற்றக் கூறி அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. இதை நம் முன்னோர்களும் பின்பற்றி நல்வாழ்வு வாழ்ந்து வந்தனர். இதன்படி தற்போது புதன்கிழமை அன்று பெண்கள் இந்த குறிப்பிட்ட விஷயங்களை செய்தால் உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியம் ஏற்படுவதன் மூலம் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1. சமையலறையில் சமைக்க பயன்படும் பொருட்கள் தீர்ந்து விட்டது என்றால் புதன்கிழமை […]

You May Like