செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் வருமான வரி விலக்கு உண்டு என்றும் பெற்றோர்கள் தங்களிடம் எப்போது பணம் இருக்கிறதோ அப்போது செலுத்தினால் போதும் என்றும் புதுக்கோட்டை மாவட்ட அஞ்சல் அதிகாரி ராதை சூப்பர் தகவலை வெளியிட்டுள்ளார்.
செல்வ மகள் சேமிப்பு திட்டமானது பெண் குழந்தைகளின் நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டமாகும். கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி பிரதமர் மோடியால் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண் குழந்தைகளின் சேமிப்புகளுக்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த கணக்கை உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் அஞ்சல் அல்லது வங்கிகளில் பணம் செலுத்தி தொடங்கிக் கொள்ளலாம்.
பெண்ணுக்கு திருமணமாகும் வரை பணத்தை செலுத்த முடியம். அதிகபட்சம் 1.5 லட்சம் வரை வருடம் வைப்பு தொகையாக செலுத்த முடியும். ஆண்டுக்கு 1.25 லட்சம் செலுத்தினால் அதாவது மாதம் 10,000 வரை செலுத்தினால், 21 ஆண்டுகளுக்கு பிறகு 50 லட்சம் ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். இந்த சேமிப்பு தொகைக்கு வருமான விலக்கு பெற முடியும். இதற்கிடையே, செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் பெண் குழந்தைகளை சேர்ப்பதற்கான சிறப்பு மேளா 21, 28, மார்ச் 10 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் என அஞ்சல் துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நாட்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என்றும் பெண் குழந்தைகளின் பெற்றோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் நடராஜன் கூறியிருந்தார். அதன்படி, இன்று செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் சிறப்பு மேளா நடைபெறவுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்ட அஞ்சல் அதிகாரி ராதை முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ”செல்வமகள் சேமிப்பு திட்டமானது பெண் குழந்தைகளின் மேம்பாட்டிற்கான ஒரு சிறப்பான திட்டம் ஆகும். மாதந்தோறும் பணம் செலுத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தங்களிடம் எப்போது பணம் இருக்கிறதோ அப்போது இத்திட்டத்தில் பெற்றோர்கள் டெபாசிட் செய்து கொள்ளலாம். இத்திட்டத்திற்கு வருமான வரி விலக்கு உண்டு. இந்த கணக்கை துவங்க குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், ஆதார் எண், பான் கார்டு, 2 பாஸ்போஸ்ட் சைஸ் புகைப்படம் இருந்தால் போதும். இந்த திட்டத்தில் சேமிப்பது லாபமா? என்று பலருக்கும் சந்தேகம் இருக்கும். நிச்சயமாக ஒரு பெண் குழந்தையின் எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாகவும், லாபமானதாகவும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : நெல்லை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!! எப்போது தெரியுமா..? ஆட்சியர் வெளியிட்ட குட் நியூஸ்..!!