fbpx

மாஸ் காட்டிய ஜடேஜா..!! ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்திய அணி..!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 263 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி, 262 ரன்களை சேர்த்தது. 1 ரன் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா இரண்டாவது நாள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 61 ரன்களைச் சேர்த்திருந்தது. இதனையடுத்து, இன்று தொடங்கிய 3ஆம் ஆட்டத்தில் ஜடேஜா, அஸ்வின் சுழலில் ஆஸ்திரேலியா 113 ரன்களில் சுருண்டது.

இதில், ஜடேஜா 7 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா – கே.எல்.ராகுல் இணை தொடக்கம் கொடுத்தது. கே.எல்.ராகுல் நம்பிக்கை அளிப்பார் என எதிர்பார்த்த நிலையில், 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார். ரோஹித் அதிரடி காட்டி 20 பந்துகளில் 31 ரன்களைச் சேர்ந்தார். எதிர்பாராத விதமாக அவர் ரன் அவுட்டாக, கோலி – புஜாரா இணை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. கோலி 20 ரன்களில் அவுட்டானாலும், புஜாராவுடன் இணைந்து ஸ்ரீகர் பரத் அணியை வெற்றிபெறச்செய்தார். இதன் மூலம் 26.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டிய இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Chella

Next Post

”திவாலானது பாகிஸ்தான்”..!! உண்மையை போட்டுடைத்த பாதுகாப்புத்துறை அமைச்சர்..!!

Sun Feb 19 , 2023
பாகிஸ்தான் ஏற்கனவே திவாலாகிவிட்டது என்றும், திவாலாகிவிட்ட ஒரு நாட்டில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் பரபரப்பு தகவலை கூறியுள்ளார். இலங்கையைத் தொடர்ந்து கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கித் தவிக்கிறது. கடந்த மாத இறுதியில் பாகிஸ்தானில் பணவீக்கம் 24.5% ஆக உயர்ந்தது. வெளிச்சந்தையில் அத்தியாவசிய, உணவுப்பொருட்களின் விலை, முந்தைய மாதத்தை விட 30% முதல் 50% வரை அதிகரித்து காணப்பட்டது. தற்போது பாகிஸ்தானில் ஒரு லிட்டர் […]
”திவாலானது பாகிஸ்தான்”..!! உண்மையை போட்டுடைத்த பாதுகாப்புத்துறை அமைச்சர்..!!

You May Like