ஜாபர் சாதிக் தனது 2 ஐபோன்களையும் உடைத்து நேப்பியர் பாலம் அருகே வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தி வந்த புகாரில் ஜாபர் சாதிக்கை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர்.கடந்த 3 ஆண்டுகளில் உணவு பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் 3,500 கிலோ போதைப் பொருள் தயாரிப்புக்கான மூலப் பொருளை தேங்காய்பவுடர் மற்றும் உலர் பழங்களில்மறைத்து வைத்து ஆஸ்திரேலியாவுக்கு பார்சல் மூலம் அனுப்பியுள்ளார்.
கிரிஸ்டல் மெத் எனப்படும் போதை பொருளில் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.2,000 கோடிக்கு மேல் இருக்கும்.போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் தொடர்பு குறித்து டெல்லியில் இயக்குநர் அமீரிடம் கடந்த மாதம் விசாரணை நடைபெற்றது. ஜாஃபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு வரும் மே 29-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர் எந்தெந்த நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தினார்..? என்பது தொடர்பான பட்டியலை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளனர்.
அதில், ஜாபர் சாதிக் தனது 2 ஐபோன்களையும் உடைத்து நேப்பியர் பாலம் அருகே வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தியுள்ளார். 2014-ல் முகமது முஸ்தபா மூலம் சாதிக்குடன் பழக்கம் என இயக்குநர் அமீர் வாக்குமூலம் அளித்ததாக குற்றப்பத்திரிகை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.