fbpx

Breaking: ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் ஏப்.20ஆம் தேதி வரை நீட்டிப்பு..!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேர் டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதனையடுத்து ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் வழுக்கி மீதான இறுதிக்கட்ட விசரனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்ற காவ லை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த கடத்தலில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் முக்கிய பங்காற்றியது தெரிய வந்தது.

இதையடுத்து, ஜாபர் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புத் துறையினர் மார்ச் 9 ஆம் தேதி டெல்லியில் கைது செய்தனர். தொடர்ந்து, ஜாபக் சாதிக்கின் கூட்டாளிகளான சதா, முகேஷ், முஜிபுர் ரகுமான், அசோக் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

Also Read: ’தவறாக கொடுத்த விளம்பரத்தை நியாயப்படுத்தவில்லை’..!! சுப்ரீம் கோர்ட்டில் கைகூப்பி மன்னிப்பு கேட்டார் பாபா ராம்தேவ்..!!

Kathir

Next Post

தயிர் மற்றும் மோரில் எது சிறந்தது..? இந்த கோடை வெயிலுக்கு எதை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்..?

Tue Apr 16 , 2024
இந்திய உணவுக் கலாச்சாரத்தில் தயிருக்கும், மோருக்கும் மிகுந்த முக்கியத்துவம் உண்டு. அதிலும், தமிழ்நாட்டில் கோடைகாலங்களில் வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு பானையில் நிரப்பிய மோர் வழங்கி உபசரிக்கும் வழக்கம் இன்றைக்கும் உண்டு. தயிர் கெட்டியானது. பாலை காய்ச்சி, புளிக்க வைத்த பின்னர் கிடைப்பது. அதே தயிரில் உள்ள வெண்ணெய்யை பிரித்து எடுத்த பின் கிடைப்பது மோர். மோர் திரவ வடிவில் உள்ளது. இரண்டையும் தான் நாம் விரும்பிச் சாப்பிடுகிறோம். நிச்சயமாக இரண்டுக்குமே […]

You May Like