ருஷிகொண்டா மலையை தகர்த்து, முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கட்டியிருக்கும் பங்களா பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி. இவர், ருஷிகொண்டா மலையை தகர்த்து, சுமார் ரூ.500 கோடி மதிப்பில் ஆடம்பர பங்களா ஒன்றை கட்டியுள்ளார். இந்த பங்களாவின் புகைப்படத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளது. இதையடுத்து, ஆட்சி மாறியது அவர் வசமாக சிக்கிக் கொண்டார்.
கண்ணாடிகள், கிரானைட்கள் என மிக பிரம்மாண்டமாக பங்களா கட்டப்பட்டுள்ளது. பாத்ரூம் தொட்டிக்கு மட்டும் 25 லட்சம் ரூபாய் செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த பங்களாவுக்குள் இருந்து பார்த்தால், கடல் பரப்பும், உண்மையிலேயே இப்படியொரு இடத்தை வேறெங்கும் பார்க்க முடியாதோ என்ற கேள்வியை எழுப்பியது. எந்த சத்தமும் இல்லாமல் மலையின் ஒரு பகுதிய இடித்து கட்டப்பட்டுள்ள இந்த ஆடம்பர பங்களாவுக்கு சீல் வைப்பதா? அல்லது அரசுக்கு சொந்தமாக்குவதா? என ஆலோசனைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த பங்களாவில் இருக்கும் மரம், செடி ஆகியவை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாம். இதற்கு மட்டும் சுமார் ரூ.22 கோடி செலவிட்டுள்ளார் ஜெகன் மோகன். மேலும், இங்கு பொருத்தப்பட்டிருக்கும் குழாய்கள் மட்டும் ரூ.5 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாம். இந்த பங்களா, சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு எதிராக கட்டப்பட்டுள்ளது. இதனால், இது பொதுப் பயன்பாட்டுக்கு அனுமதி அளிப்பதில் சிக்கல் உள்ளது. மேலும், இந்த பங்களாவுக்கு சாலை, குடிநீர், மின்சார வசதி என அனைத்தும் வசதிகளும் எப்படி கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.