தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏதுவாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றுடன் சேர்த்து ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், பொங்கல் பரிசுத்தொகையை வங்கிக் கணக்கில் செலுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்ய வேண்டுமென உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கில் ரூ.1,000 வரவு வைப்பதில் அரசு என்ன சிக்கல் வரப்போகிறது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. அதோடு அடுத்தாண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.