வெல்லம் என்பது கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை இனிப்பாகும். இது சித்த மருத்தவம் முதல் ஆயுர்வேத வைத்தியம் வரை பல நோய்களை குணமாக்க பயன்பட்ட ஒரு அதிசய பொருள் ஆகும். வெல்லத்தில் இரும்புச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் சி உள்ளடக்கம் மிகவும் நிறைந்துள்ளது.. அதிலும் வெல்லத்தை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கலாம்.
நம் நாட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை வெல்லம்,நாட்டு சர்க்கரை பயன்படுத்தப்பட்டது.ஆனால் நாளடைவில் வெள்ளைக்காரர்களின் ஆதிக்கத்தால் வெண்மை சர்க்கரைக்கு மாறினோம்.இந்த சுத்திகரிக்கப்பட்ட சரக்கரை வெறும் கரி துண்டு தான். இதனால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும்.வெல்லத்தை எப்படி சாப்பிட வேண்டும் என்ற சில தகவல்களை காண்போம்.
எப்படி எடுத்து கொள்ள வேண்டும்..?
➢ நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
➢ கொதித்ததும், அதில் ஒரு நடுத்தர அளவிலான துண்டு வெல்லத்தைச் சேர்த்து, அது உருகும் வரை கிளறவும்
➢ இது வெதுவெதுப்பாக இருக்கும் போது, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
➢ இந்த சூடான பானம் உங்கள் நாளின் காலை வேளைக்கு ஒரு சிறந்த தொடக்கமாக இருக்கும்.
➢ எலும்புகளை வலுவாக்கும், மூட்டு வலிகளைப் போக்கும்.
➢ மேலும் உங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இவை உதவும்.
➢ வெல்லம் தண்ணீர் கீல்வாத வலியையும் மேம்படுத்தும்.
➢ இது உங்கள் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைக் கொண்டுவரும் அதே வேளையில் உங்கள் ஒட்டுமொத்த உடலையும் சுத்தப்படுத்த உதவுகிறது.
➢ இது உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை நன்கு பராமரிக்கிறது.
➢ இரத்த சோகை உள்ள பெண்களும் வெதுவெதுப்பான நீரில் வெல்லம் சாப்பிடலாம்.
➢ அதிகாலையில் வெறும் வயிற்றில் வெல்ல நீரை எடுத்துக்கொண்டால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.