கேன்டீன் தொடர்பான வாக்குவாதத்தில் சக ஊழியர்களால் சிறை காவலர் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்ட சிறைச்சாலையின் பொறுப்பாளரா இருப்பவர் முகேஷ் துபே. இவர் கேன்டீன் பொறுப்பாளராக இருந்து வருகிறார். அதே சிறைச்சாலையில் பணிபுரியும் சில காவலர்கள், முகேஷ் துபே-வால் அவர்களின் கேன்டீன் வியாபாரம் பாதித்ததாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் தனது கேன்டீன் உணவின் தரத்தை குறைத்துக் கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் 3 காவலர்கள் அவரை சுற்றி நின்றுக்கொண்டு முகேஷ் துபேவை தடி, கட்டை போன்ற பொருளால் தாக்குகின்றனர். அவர் தாக்கப்படும் காட்சி சிறைச்சாலைக்கு வெளியே கண்காணிக்கப் பயன்படும் சிசிடிவி காட்சியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உயர் காவல்துறை அதிகாரி ஒருவர், “பரேலி
சிறைச்சாலையில் குற்றம்சாட்டப்பட்ட 5 காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது. முகேஷ் துபே சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்திருக்கிறார்.