fbpx

ஜெயிலர் பட நடிகர் சிவராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதி..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

பிரபல நடிகர் சிவராஜ்குமார் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் உள்ள வைதேகி மருத்துவமனையில் சிவண்ணாவுக்கு சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். காய்ச்சல் தவிர, பொது சுகாதார பரிசோதனையும் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. அவரை ஓய்வெடுக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தியதால், தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.

பெரிய பிரச்சனை எதுவும் இல்லை என அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், ரசிகர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு சிவன்னாவுக்கு இதயம் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டது. அதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

பெரும் சோகம்..!! தமிழ் தேசிய செயற்பாட்டாளர் சீதையின் மைந்தன் காலமானார்..!! பிரபலங்கள் இரங்கல்..!!

Sat Nov 4 , 2023
தமிழ் தேசிய செயற்பாட்டளர்களில் ஒருவரான சீதையின் மைந்தன் என்கிற தட்சிணாமூர்த்தி, உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ்நாட்டின் தீவிர தமிழ் தேசிய முன்னோடிகளில் ஒருவர் சீதையின் மைந்தன். தட்சிணாமூர்த்தி என்ற இயற்பெயர் கொண்ட இவர், தமிழர் நிலம், தமிழர் உரிமைகள் தொடர்பான களங்களில் தீவிரமாக இயங்கி வந்தவர். கச்சத்தீவு மீட்புக்கான முன்னெடுப்புகள் பலவற்றையும் மேற்கொண்டார். கச்சத்தீவு உட்பட தமிழர் உரிமைகள் தொடர்பாக பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார். சீமானின் நாம் தமிழர் உள்ளிட்ட தமிழ் […]

You May Like