சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் ’ஜெயிலர் ’ திரைப்படத்தின் போஸ்டரை சன்பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்டது.
ஜெயிலர் படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அனிருத் இசையில் , ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கி வருகின்றார்.இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தீம் மியூசிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயில் வார்டனாக நடித்துள்ளார். இது ஆக்ஷன் கலந்த படமாக எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் வெளியான போஸ்டரில் ரஜினிகாந்த் கையை பின்னால் கட்டியவாறு செம்ம லுக்காக நடந்து வருவது போல இருந்தது ரசிகர்களை கவர்ந்தது.
தற்போது தீம் மியூசிக் வெளியிடப்பட்டுள்ளது. அனிருத் அமைத்துள்ள இசைக்கு டுவிட்டரில் நல்ல வரவேற்வு கிடைத்துள்ளது.