நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..
‘அண்ணாத்த’ படத்திற்குப் பிறகு ரஜினியின் அடுத்தப் படத்தை யார் இயக்குவது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், இப்படத்தை நெல்சன் இயக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது.. சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தலைவர் 169 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டது.. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்..
இப்படத்திற்கு ஜெயிலர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.. இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்க உள்ளதாக கூறப்பட்டது.. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் முக்கிய அப்டேட்டை சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.. ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க உள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது..
மேலும் ரஜினியின் புதிய லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.. இந்த போஸ்டருக்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தாலும், டாக்டர் படத்தின் சிவகார்த்திகேயன் லுக்கை போலவே இருப்பதாக பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்..