fbpx

ஜெய்ப்பூர் எரிவாயு டேங்கர் தீவிபத்து!. பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு!.

Jaipur tanker explosion: ஜெய்ப்பூரில் பெட்ரோல் கிடங்கு அருகே, ஏற்பட்ட தீ விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் பெட்ரோல் கிடங்கு ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பெட்ரோல் நிரப்புவதற்கு 40க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தது. பெட்ரோல் கிடங்கிற்கு அருகே, ரசாயனப்பொருட்களை ஏற்றிச் சென்ற லாரி, மற்ற வாகனங்களோடு மோதியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 40 லாரிகளிலும் தீ விபத்தில் எரிந்து சாம்பலானது.

இதையடுத்து மளமளவென தீ பரவ துவங்கியது. அங்கு 40 லாரிகளிலும் தீ பற்றியது. அப்பகுதியில் கரும்புகைகள் சூழந்தன. 20 வாகனங்களில், விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

Readmore: மத்தியப் பிரதேசம் : தீ விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு..!! – எப்படி நிகழ்ந்தது?

Kokila

Next Post

டெல்லி பள்ளியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்காளதேச மாணவர்களை அடையாளம் காண MCD உத்தரவு..!!

Sat Dec 21 , 2024
MCD issues order to identify illegal Bangladeshi migrant children in Delhi schools

You May Like